BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைவள்ளிக் கிழங்கு புட்டிங்

Photo of sweet potato pudding by Apsara Fareej at BetterButter
0
3
0(0)
0

சர்க்கரைவள்ளிக் கிழங்கு புட்டிங்

Jul-30-2018
Apsara Fareej
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு புட்டிங் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஏற்ற மிகவும் சத்தான ரெஸ்பி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • ఆవిరికి
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1( ஒரு ஜான் அளவு)
  2. முட்டை - 2
  3. கருப்பட்டி பொடித்தது - 4 மேஜைக்கரண்டி
  4. கெட்டியான தேங்காய்ப்பால் - 1/4 கப்
  5. கண்டன்ஸ்ட் மில்க் - 4 மேஜைக்கரண்டி
  6. ஏலக்காய்த்தூள் - 3/4 தேக்கரண்டி
  7. உப்பு - 1/2 தேக்கரண்டி
  8. நெய் - 1 தேக்கரண்டி
  9. சீனி - 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் கிழங்கை வேகை வைத்து எடுத்து, அதை தோலை நீக்கிவிட்டு நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
  2. தேங்காய்பாலுடன் கருப்பட்டியை சேர்த்து நன்கு கரைத்து விட்டு வடிக்கட்டி வைத்து கொள்ளவும்.
  3. வடிக்கட்டிய பாலுடன், மசித்த கிழங்கை சேர்த்து நன்கு ஒன்று சேர கலக்கி விட்டு, பின்பு அதில் கண்டென்ஸ்ட் மில்க், உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு ஒன்று சேர கலக்கி வைத்து கொள்ளவும்.
  4. கேரமல் செய்ய ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சீனியை சேர்த்து ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி நன்கு ஸ்பூனால் கை விடாமல் கலக்கவும். லேசான சிவந்த கேரமலாக வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு புட்டிங் வேக வைக்கும் அடி குறுகலான பாத்திரத்தில் ஊற்றி பரவலாக்கி விடவும்.
  5. இப்போது அதன் மேல் கலக்கி வைத்திருக்கும் கலவையை ஊற்றி, நெய் விட்டு ஒரு கலக்கு கலக்கி விட்டு இட்லி சட்டியில் தட்டில்லாமல் தண்ணீர் ஊற்றி ஒரு சின்ன தட்டையான ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் இந்த புட்டிங் கலவை உள்ள பாத்திதத்தை வைத்து மூடி 20 நிமிடம் வேக விடவும்.
  6. 20 நிமிடம் கழித்து வெந்ததை உறுதிப்படுத்தி விட்டு இறக்கி விட்டு, இரண்டு நிமிடத்திற்கு பிறகு ஒரு தட்டில் கவிழ்த்தால் வந்துவிடும். அதை அப்படியேவும் துண்டுகள் போட்டு சாப்பிடலாம். ஃப்ரிஜில் வைத்து சில்லென்று சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்