Photo of Maida Halwa by Jayasakthi Ekambaram at BetterButter
1474
0
0.0(0)
0

மைதா அல்வா

Jul-30-2018
Jayasakthi Ekambaram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மைதா அல்வா செய்முறை பற்றி

மைதா சர்க்கரை நெய் சேர்த்து செய்யும் இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 200 கிராம்
  2. சர்க்கரை 300 கிராம்
  3. தண்ணீரில் 400 மில்லி
  4. முந்திரிப் பருப்பு 8
  5. நெய் 100 கிராம்
  6. கேசரி பவுடர் ஒரு சிட்டிகை
  7. ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் 75 கிராம் நெய் ஊற்றி சூடு பண்ணவும்
  2. எண்ணெய் சூடானதும் அதில் முந்திரிப்பருப்பு மைதா மாவு இரண்டையும் போட்டு லேசான தீயில் வைத்து வதக்கவும்
  3. முந்திரிப்பருப்பு கலர் மாறும் வரை வதக்க வேண்டும்
  4. இரண்டு டம்ளர் தண்ணீரில் கேசரி பவுடர் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்
  5. கொதித்த தண்ணீரை மைதா மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளற வேண்டும்
  6. ஐந்து நிமிடங்கள் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
  7. இப்போது சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்
  8. மீதம் இருக்கும் நெய்யை அல்வாவில் ஊற்றி கிளற வேண்டும்
  9. ஏலக்காய் தூள் சேர்க்கவும்
  10. அல்வா பதம் வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி விடவும்.
  11. ஆறிய பின்பு துண்டுகள் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்