வீடு / சமையல் குறிப்பு / பூண்டு குழம்பு

Photo of Garlic Kuzhambu by Jayasakthi Ekambaram at BetterButter
180
0
0.0(0)
0

பூண்டு குழம்பு

Jul-30-2018
Jayasakthi Ekambaram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூண்டு குழம்பு செய்முறை பற்றி

குண்டு நிறைய போட்டு மிளகாய் தூள் புளி சேர்த்து செய்யும் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூண்டு ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு
  2. குழம்பு மிளகாய் தூள் 6 ஸ்பூன்
  3. உரித்த பூண்டு 20 பற்கள்
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் 100 கிராம்
  5. பொடியாக நறுக்கிய தக்காளி 100 கிராம்
  6. கல் உப்பு தேவையான அளவு
  7. நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
  8. கடுகு ஒரு ஸ்பூன்
  9. சீரகம் அரை ஸ்பூன்
  10. வெந்தயம் அரை டீஸ்பூன்
  11. கருவேப்பிலை ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. புளியை நன்றாக கரைத்து அதில் கல் உப்பைப் போட்டுக் கொள்ளவும்
  2. அதில் குழம்பு மிளகாய் தூளை போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும்
  3. அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும்
  4. அதில் கடுகை போட்டு பொரிய விடவும்
  5. கடுகு பொரிந்ததும் சீரகத்தையும் பிறகு வெந்தயத்தையும் போடவும்
  6. வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்
  7. வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியை போட்டு வதக்கவும்
  8. பூண்டு பற்களைப் போட்டு நன்றாக வதக்கவும்
  9. கருவேப்பிலையை போட்டு வதக்கவும்
  10. பூண்டு நன்றாக வதங்கிய பிறகு புளிக்கரைசலை ஊற்றவும்
  11. குழம்பு நன்றாக கொதித்த உடன் சிறு தீயில் வைத்து மூடி வைக்கவும்
  12. பத்து நிமிடம் வரை சிறிய தீயில் சமைக்கவும்
  13. குழம்பு கெட்டி பதம் வந்தவுடன் அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்