வீடு / சமையல் குறிப்பு / முட்டை...தே.பால் புட்டிங்

Photo of Egg with coconut milk pudding by Nazeema Banu at BetterButter
316
0
0.0(0)
0

முட்டை...தே.பால் புட்டிங்

Jul-30-2018
Nazeema Banu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

முட்டை...தே.பால் புட்டிங் செய்முறை பற்றி

வட்டிலப்பம் என்று சொல்லப்படும் சுவையான புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • முகலாய்
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. முட்டை 20
  2. பெ.தேங்காய் 2
  3. சர்க்கரை 2கப்
  4. மில்க் மெய்ட் டின் 1
  5. முந்திரி பாதாம் கிஸ்மிஸ் தேவையான அளவு
  6. ஏலக்காய் 6

வழிமுறைகள்

  1. தேங்காயைத் துருவி மிக்சியில் இட்டு இலேசாக தண்ணீர் தெளித்து திக்கான பால் எடுத்துக்கொள்ளவும்
  2. முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து தேங்காய் பாலுடன் சேர்க்கவும்
  3. ட்ரை ப்ருட்ஸ் அனைத்தையும் நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  4. தே.பால் முட்டையுடன் சர்க்கரை சேர்த்து அடித்துக் கலக்கவும்
  5. அதனுடன் மில்க் மெயிட் ஒரு டின் மற்றும் நெய் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கவும் .
  6. அதில் வறுத்த டரை ஃப்ரூட்ஸ் மற்றும் இடித்த ஏலக்காய் பொடி சேர்க்கவும்
  7. இட்லி பாத்திரம் ஒன்றில் கால் பாகம் தண்ணீர் ஊற்றி கொதி வரும் போது முட்டை பால் கலவை பாத்திரத்தை உள்ளே வைக்கவும்
  8. டபுள் பாயில் முறையில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வற்றும் போது கவனமாக அவ்வப்போது தண்ணீர் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்
  9. இந்த முறையில் புட்டிங் வேக கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகும்
  10. நன்றாக வெந்து விட்டதா என்று பார்க்க ஒரு குச்சி அல்லது சிறு கத்தியால் நடுவில் குத்திப்பார்த்தால் கலவை ஒட்டாமல் இருக்க வேண்டும்
  11. நன்றாக வெந்ததும் சிறிது ஆற விட்டு துண்டுகள் செய்யலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்