வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சூப்

Photo of Cream of tomato soup by Mathura Thiagarajan at BetterButter
211
0
0.0(0)
0

தக்காளி சூப்

Jul-30-2018
Mathura Thiagarajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சூப் செய்முறை பற்றி

சுலபமான ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சூப்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெங்களூர் தக்காளி ஒன்றரை கப்
  2. பட்டை ஒன்று
  3. லவங்கம் 1
  4. பிரியாணி இலை சிறிது 1
  5. பெரிய வெங்காயம் அரை கப்
  6. வெண்ணை 2 டேபிள் ஸ்பூன்
  7. பால் ஏடு 2 டேபிள் ஸ்பூன்
  8. தண்ணீர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் வெண்ணெய் சேர்த்து அதில் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை சேர்க்கவும் பின்பு அறுத்து வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
  2. வெங்காயம் வதங்கிய பின்பு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும் இதனுடன் உப்பு சேர்க்கவும்
  3. தக்காளி வெங்காய கலவையுடன் 2 டேபிள்ஸ்பூன் பால் ஏடு சேர்த்து வதக்கிக் கொள்ளவும் அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை குக்கரை மூடி கொதிக்க விடவும்
  4. விசில் இறங்கிய பிறகு ஒரு வடிகட்டியில் தக்காளி சாறு நன்கு வடித்துக் கொள்ளவும்
  5. பட்டை லவங்கம் பிரிஞ்சி இலையை எடுத்து விடவும்
  6. ஒரு மிக்ஸியில் வடிவேல் சேர்ந்த தக்காளி வெங்காயம் கலவையை சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்
  7. தக்காளி வெங்காயம் பேஸ்டையும் வடிகட்டியில் ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்
  8. தக்காளி சாறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அடுப்பில் வைக்கவும் மிதமான தீயில் கொதிக்க விடவும்
  9. ஒன்றரை டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீரில் கரைத்து கொதிக்கும் தக்காளி சாறுடன் சேர்க்கவும்
  10. தக்காளி சாறு சூப் பதத்திற்கு கொதித்து வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்
  11. காரத்திற்கு சிறிது மிளகு தூள் சேர்த்து சூப் பவுலில் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்