வீடு / சமையல் குறிப்பு / மைக்ரோவேவ் கேரட் அல்வா பர்பைட்:

Photo of Microwave Carrot Halwa Parfait by suganya balusamy at BetterButter
232
1
0.0(0)
0

மைக்ரோவேவ் கேரட் அல்வா பர்பைட்:

Jul-30-2018
suganya balusamy
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மைக்ரோவேவ் கேரட் அல்வா பர்பைட்: செய்முறை பற்றி

விஷேச நாட்களில் செய்யக்கூடிய எளிதான இனிப்பு பலகாரம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • பீஹார்
  • மைக்ரோவேவிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைக்ரோவேவ் கேரட் அல்வா:
  2. 5 மேஜைக்கரண்டி நெய்
  3. 2 மேஜைக்கரண்டி முந்திரி
  4. 1 மேஜைக்கரண்டி உலர்ந்த திராட்சை
  5. 2 கப் துருவிய கேரட்
  6. 1 கப் சூடான பால்
  7. 2 கப் துருவிய சர்க்கரை இல்லாத கோவா
  8. 1/2 கப் - 3/4 கப் சர்க்கரை
  9. 1/2 தேக்கரண்டி ஏலக்காய்தூள்
  10. க்ரிம் சீஸ் ப்ராஸ்டிங்:
  11. 1/2 கப் ஹெவி விப்பிங் க்ரிம்
  12. 1/2 கப் க்ரிம் சீஸ்
  13. 3 மேஜைக்கரண்டி சர்க்கரை
  14. 1/4 தேக்கரண்டி வெண்ணிலா எஸன்ஸ்

வழிமுறைகள்

  1. மைக்ரோவேவ் கேரட் அல்வா:
  2. மைக்ரோவேவ் பாத்திரத்தில் 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து முந்திரி உலர்ந்த திராட்சையை 1 நிமிடம் மைக்ரோவேவில் வைக்கவும்.
  3. முந்திரி உலர்ந்த திராட்சையை பாத்திரத்தில் இருந்து எடுத்து அதே பாத்திரத்தில் துருவிய கேரட் சேர்த்து நன்கு கலந்து மைக்ரோவேவ் ஹைல் 3 நிமிடங்கள் வைக்கவும்.மைக்ரோவேவ்லிருந்து எடுத்து நன்கு கலந்து மறுபடியும் 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  4. மைக்ரோவேவ்லிருந்து எடுத்து சர்க்கரை,கோவா,ஏலக்காய்தூள் மற்றும் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து மைக்ரோவேவ் ஹைல் 3 நிமிடங்கள் வைக்கவும்.
  5. மறுபடியும் 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து மைக்ரோவேவ் ஹைல் 3 நிமிடங்கள் வைக்கவும். இறுதியில் மீதம் இருக்கின்ற நெய் சேர்த்து வறுத்த முந்திரி உலர்ந்த திராட்சையை்தூவி இறக்கவும்.
  6. க்ரிம் சீஸ் ப்ராஸ்டிங்:
  7. பாத்திரத்தில் ஹெவி விப்பிங் க்ரிம் சேர்த்து,நன்கு கலக்கவும்.
  8. பிறகு க்ரிம் சீஸ்,சர்க்கரை,வெண்ணிலா எஸன்ஸ் கெட்டியாகும் வரை பீட் செய்யவும்.
  9. கண்ணாடி குவளையில் கேரட் அல்வா க்ரிம் சீஸ் ப்ராஸ்டிங் அடுக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்