வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மேனியா

Photo of Chicken maniya by Selvi N at BetterButter
369
0
0.0(0)
0

சிக்கன் மேனியா

Jul-30-2018
Selvi N
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் மேனியா செய்முறை பற்றி

இந்த சிக்கன் மேனியாவில் சிக்கன் பிரியாணி, கேஎப்சி சிக்கன் பாப்கார்ன் மற்றும் சிக்கன் கட்லெட் செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் பிரியாணி மசாலா
  2. சின்ன வெங்காயம் 15
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. இஞ்சி ஒரு பெரிய துண்டு
  5. பூண்டு ஐந்து பற்கள்
  6. மல்லி இலை ஒரு கைப்பிடி
  7. புதினா ஒரு கைப்பிடி
  8. சிக்கன் பிரியாணி செய்வதற்கு
  9. நெய் 5 tbsp
  10. பிரிஞ்சி இலை - 2
  11. ஏலக்காய்-2
  12. கிராம்பு 4
  13. பட்டை-2
  14. நறுக்கிய பெரிய வெங்காயம் 2
  15. நறுக்கிய தக்காளி மூன்று
  16. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  17. மிளகாய்தூள் 1.5 டீஸ்பூன்
  18. பிரியாணி மசாலா 3 டீஸ்பூன்
  19. சிக்கன் 400 கிராம்
  20. பாஸ்மதி அரிசி 2 கப்
  21. தண்ணீர் 4 கப்
  22. உப்பு தேவையான அளவு
  23. சிக்கன் பாப்கான் செய்வதற்கு
  24. போன்லெஸ் சிக்கன் துண்டுகள் 200 கிராம்
  25. சோயா சாஸ் அரை tbsp
  26. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  27. உப்பு அரை டீஸ்பூன்
  28. முட்டை ஒன்று
  29. கார்ன்ஃப்ளார் ஒரு டேபிள்ஸ்பூன்
  30. மைதா மாவு கால் கப்
  31. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  32. பூண்டு பொடி - 1/4 tsp
  33. எண்ணை பொரிப்பதற்கு
  34. சிக்கன் கட்லெட் செய்ய
  35. சிக்கன் கொத்துக்கறி 250 கிராம்
  36. இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன்
  37. நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று
  38. சாட் மசாலா ஒரு டீஸ்பூன்
  39. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  40. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  41. வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு ஒன்று
  42. நறுக்கிய மல்லி இலை சிறிதளவு
  43. உப்பு தேவையான அளவு
  44. பிரட் கிரம்ஸ் 1/4 cup
  45. முட்டை ஒன்று
  46. எண்ணை பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பிரியாணி செய்வதற்கு
  2. பாஸ்மதி அரிசியை நன்றாக சுத்தம் செய்து விட்டு அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி இலை புதினா இலை இஞ்சி பூண்டு அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்
  4. பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் தாளிப்பு பொருட்களை போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்
  5. பெரிய வெங்காயம் அரைத்த பிரியாணி மசாலா தக்காளி மூன்றையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  6. பின்பு சிக்கன் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்
  7. பாஸ்மதி அரிசி, தண்ணீர், உப்பு மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொதி வந்ததும் பிரஷர் குக்கரை மூடி விடவும்
  8. 3 விசில் விட்டு எடுக்கவும்.
  9. நன்றாக கலந்த பின் பரிமாறவும்
  10. சிக்கன் பாப்கார்ன்
  11. சிக்கன் துண்டுகள், மிளகு தூள், உப்பு, சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, முட்டை, கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்
  12. மைதா மாவு மிளகாய்த்தூள் பூண்டு பொடி மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  13. 20 நிமிடம் கழித்து சிக்கன் துண்டுகளை எடுத்து மைதா மாவு கலவையில் நன்றாக கோட் செய்யவும்.
  14. மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  15. சிக்கன் கட்லெட் செய்ய
  16. ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்
  17. பின்பு கொத்தின கோழி கறி மசாலா பொருட்கள், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மல்லி இலை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  18. ஆறிய பின் ஒரு பௌலில் சேர்த்து பிரட் கிரம்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கட்லெட் வடிவில் செய்து கொள்ளவும்
  19. முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்
  20. செய்து வைத்த கட்லெட்டை முட்டைக் கலவையில் நனைத்து பிரட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்து கொள்ளவும்
  21. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கட்லெட்டை இறு புறமும் பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்