வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் வேர்க்கடலை புலாவ்

Photo of Raw banana peanut pulav by Krishnasamy Vidya Valli at BetterButter
210
0
0.0(0)
0

வாழைக்காய் வேர்க்கடலை புலாவ்

Jul-30-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் வேர்க்கடலை புலாவ் செய்முறை பற்றி

எளிதாக வீட்டில் செய்யலாம் இந்த வித்தியாசமான வாழைக்காய் வேர்க்கடலை புலாவ். தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை.தயிர் சாலட் போதுமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாஸ்மதி அரிசி அரை கப்
  2. வாழைக்காய் 1/2
  3. வெங்காயம் பொடியாக நறுக்கியது இரண்டு மேசைக்கரண்டி
  4. வறுத்த வேர்க்கடலை 2 மேஜைக்கரண்டி
  5. உப்பு கால் தேக்கரண்டி
  6. காஷ்மீரி சில்லி பவுடர் கால் தேக்கரண்டி
  7. தனியா பொடி கால் தேக்கரண்டி
  8. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  9. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  10. தாளிக்க தேவையானவை
  11. எண்ணெய் அல்லது நெய் 2 தேக்கரண்டி
  12. சீரகம் அரை தேக்கரண்டி
  13. இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி
  14. பட்டை ஒரு சிறிய துண்டு
  15. ஏலக்காய் கிராம்பு தலா 2
  16. பே லீவ்ஸ் சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் அளவாக தண்ணீர் விட்டு குழையாமல் வேகவைத்து எடுக்கவும்
  2. வாழைக்காயை தோல் சீவி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
  3. வாழைக்காயை கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து வெங்காயம் வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்
  5. நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கிளறவும்
  6. வாழைக்காய் சேர்த்து வதக்கவும்
  7. வேகவைத்த சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்
  8. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்