BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சில்லி இட்லி

Photo of Chilly idly by Mathura Thiagarajan at BetterButter
0
0
0(0)
0

சில்லி இட்லி

Jul-31-2018
Mathura Thiagarajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சில்லி இட்லி செய்முறை பற்றி

மிகவும் ருசியான சிற்றுண்டி.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • వేయించేవి
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி 3
  2. சோள மாவு 2 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் 1/2 கப்
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் 3 டேபிள்ஸ்பூன்
  6. சிவப்பு மிளகாய் சாஸ் 2 டேபிள் ஸ்பூன்
  7. நறுக்கிய பூண்டு 1 டேபிள்ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  9. வெங்காயத்தாள் 1 டேபிள்ஸ்பூன்
  10. சோயா சோஸ் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் இட்லியை துண்டுதுண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும் . அதில் சோளமாவை தூவி நன்கு பிரட்டிக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீரை தெளித்து கொள்ளலாம்.
  2. ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் இட்லி துண்டுகளை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  3. மற்றொரு வடசட்டியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  4. இதில் சைனீஸ் மிளகாய் சாஸ், மிளகாய் தூள், சிறிதளவு சோயா சாஸ், ஒரு டீஸ்பூன் சோளமாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. இதில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி சாஸ் பதத்திற்கு கொதிக்கவிடவும்.
  6. பொரித்து வைத்த இட்லி துண்டுகளை சாஸ் கலவையில் போட்டு பிரட்டி எடுத்து கொள்ளவும்.
  7. சிறிது வெங்காய தாள் தூவி பிரட்டி எடுத்து கொள்ளவும். சூடான சில்லி இட்லி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்