வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பிரியாணி

Photo of Vegetable Briyani by Shabana Sajudeen at BetterButter
244
0
0.0(0)
0

வெஜிடபிள் பிரியாணி

Jul-31-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பிரியாணி செய்முறை பற்றி

ருசியான ஆரோக்கியமான பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரியாணி அரிசி 2 டம்ளர்
  2. கேரட் 4
  3. பீன்ஸ் 10
  4. உருளைக்கிழங்கு 2
  5. பீட்ரூட் 1
  6. மீன் மேக்கர் 1 கை
  7. பட்டாணி 1 கை
  8. கோஸ் ½
  9. இஞ்சி 1 கை
  10. பூண்டு 1 கை
  11. தக்காளி 5
  12. பெரிய வெங்காயம் 3
  13. சின்ன வெங்காயம் 15
  14. பட்டை 4
  15. ஏலக்காய் 3
  16. எண்ணெய் 4 ஸ்பூன்
  17. தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
  18. நெய் 3 ஸ்பூன்
  19. கருவேப்பிலை
  20. கொத்தமல்லி
  21. புதினா 10
  22. பச்சை மிளகாய் 2
  23. மிளகாய்த்தூள் 3 ஸ்பூன்
  24. சிக்கன் மசாலா 2 ஸ்பூன்
  25. உப்பு

வழிமுறைகள்

  1. காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும்
  2. இஞ்சி பூண்டு, சின்ன வெங்காயம், பட்டை ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய்கள் நெய் விட்டு கருவேப்பிலை கொத்தமல்லி புதினா இலை பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்
  4. பின்னர் அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  5. இப்போது காய்கறிகளை சேர்த்து மிளகாய்த்தூள், சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  6. 1 டம்ளர் அரிசிக்கு 1½ தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் பின்பு அரிசி சேர்த்து கலந்து கொள்ளவும்
  7. இவற்றை 15 நிமிடம் தம் விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்