வீடு / சமையல் குறிப்பு / சவுத் இந்தியன் பிரியாணி

Photo of South Indian Biriyani by Sowmya Sundar at BetterButter
579
0
0.0(0)
0

சவுத் இந்தியன் பிரியாணி

Jul-31-2018
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சவுத் இந்தியன் பிரியாணி செய்முறை பற்றி

பெட்டர்பட்டர் ஆண்டு விழாவை முன்னிட்டு செய்த வெஜிடபிள் பிரியாணி .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரியாணி அரிசி- 2 கப்
  2. தண்ணீர்-3 கப்
  3. குடைமிளகாய், பீன்ஸ், காரட் போன்ற காய்கறிகள்-1 கப்
  4. பச்சை பட்டாணி-1/4 கப்
  5. வெங்காயம்-1 நறுக்கியது
  6. நெய் -1 டேபிள் ஸ்பூன்
  7. எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  8. சீரகம்-1 டீஸ்பூன்
  9. பிரிஞ்சி இலை -2
  10. ஏலக்காய்-3
  11. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  12. கரம் மசாலா தூள்-1/2 டீஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. சர்க்கரை-1/4 டீ ஸ்பூன்
  15. எலுமிச்சை சாறு-2 துளிகள்
  16. கொத்தமல்லி தழை சிறிது
  17. அரைக்க
  18. தேங்காய் துருவல்-1/4 கப்
  19. பச்சை மிளகாய்-4
  20. இஞ்சி ஒரு துண்டு
  21. பூண்டு-6 பல்
  22. பட்டை கிராம்பு தலா 2
  23. கசகசா-1 டீஸ்பூன் ஊற வைத்து

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை களைந்து விட்டு இருபது நிமிடம் வரை ஊற வைக்கவும்
  2. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்
  3. கடாயில் நெய் விட்டு அரிசியை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்
  4. மீண்டும் எண்ணெய் விட்டு சீரகம், ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை தாளித்து கொட்டி வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  5. அதனுடன் மற்ற காய்கறிகள் மற்றும் பட்டாணி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  6. பின்னர் கரம் மசாலா பொடி மற்றும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி அரிசியை சேர்த்து தண்ணீர் விட்டு சர்க்கரை மற்றும் உப்பு போட்டு மூடி வைத்து சிம்மில் நேரடியாக வேக விடவும். அல்லது குக்கரில் அனைத்தும் போட்டு இரண்டு விசில் வரை வேக விடவும்
  7. குக்கரை திறந்து இரண்டு துளி எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்