வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் குழம்பு

Photo of coconut milk curry by Lavanya Sugi at BetterButter
732
1
0.0(0)
0

தேங்காய் பால் குழம்பு

Jul-31-2018
Lavanya Sugi
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் குழம்பு செய்முறை பற்றி

side dish for variety rice and சப்பாத்தி தோசை

செய்முறை டாக்ஸ்

  • ஃப்யூஷன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இரண்டு கப் துருவிய தேங்காய்
  2. மூன்று உருளைக்கிழங்கு வேக வைத்தது
  3. பச்சை மிளகாய் 10
  4. கிராம்பு பட்டை ஏலக்காய் அன்னாசி பூ மராட்டி மொக்கு பிரிஞ்சி இலை தலா 2
  5. சின்ன வெங்காயம் நீளவாக்கில் அரிந்து 10
  6. முந்திரிபருப்பு 10
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை அல்லது நெய் தேவையான அளவு
  9. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. துருவிய தேங்காய் இல் இருந்து இரண்டு முறை பால் எடுத்து தனித்தனியே வைத்துக் கொள்ளவும்
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்
  3. பச்சை மிளகாய் மற்றும் சிறிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  4. அடி கனமான பாத்திரத்தில் முதலில் இரண்டாவது தேங்காய்ப் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  5. பிறகு முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு இடைவிடாமல் கலந்து கொண்டே இருக்கவும்
  6. பிறகு மற்றொரு வாணலியில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பட்டை லவங்கம் ஏலக்காய் அன்னாசி பூ பிரிஞ்சி இலை சிறிய வெங்காயம் பச்சை மிளகாய் முந்திரி பருப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கி தேங்காய்ப் பாலில் சேர்க்கவும்
  7. பிறகு மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து தேவையானால் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்
  8. தேங்காய் பால் குழம்பு தயார் வெள்ளை சாதம் கலவை சாதம் சப்பாத்தி தோசைக்கு ஏற்ற ஒரு குழம்பு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்