வீடு / சமையல் குறிப்பு / முட்டை குழம்பு

Photo of Egg kulambu by hajirasheed haroon at BetterButter
432
3
0.0(0)
0

முட்டை குழம்பு

Jul-31-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை குழம்பு செய்முறை பற்றி

சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை-4
  2. சின்ன வெங்காயம் 15
  3. தக்காளி-3
  4. பூண்டு-10 பல்
  5. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  7. மல்லித் தூள் 4 ஸ்பூன்
  8. தண்ணீர் ஒரு டம்ளர்
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. சீரகம் வெந்தயம் தாளிப்பதற்கு
  11. உப்பு தேவையான அளவு
  12. புளிக்கரைசல் ஒரு கப்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் வெங்காயம் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் தக்காளியை சேர்த்து உப்பு போட்டு மூடி வைத்து வதக்கவும்
  2. தக்காளி நன்கு வதங்கியவுடன் அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  3. குழம்பு நன்கு கொதி வந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றவேண்டும்
  4. உடைத்து ஊற்றிய முட்டை குழம்பை ஸ்லோவாக வைத்து 20 நிமிடம் கொதிக்கவிடவும்
  5. சுவையான முட்டை குழம்பு தயார்
  6. இதை சாதம் சப்பாத்தி தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்