அரிசி கேக் | Rice cake in Tamil

 • Photo of Rice cake by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
 • ஆயத்த நேரம்

  90

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  60

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

2

0

About Rice cake Recipe in Tamil

அரிசி கேக் recipe

அரிசி கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Rice cake in Tamil )

 • பச்சரிசி ஒரு கப்
 • பால் அரை லிட்டர்
 • சர்க்கரை ஒரு கப்
 • கண்டென்ஸ்ட் மில்க் கால் கப்
 • பாதாம் முந்திரி தேவையான அளவு
 • வெண்ணிலா எசன்ஸ் இரண்டு துளி
 • தண்ணீர் 2 கப்

அரிசி கேக் செய்வது எப்படி | How to make Rice cake in Tamil

 1. பச்சரிசியை அரை மணி நேரம் ஊற விட்டு நன்றாக தண்ணீரை வடிகட்டி ஒரு துணியில் ஆறவிடவும்
 2. லேசாக ஈரப்பதமாக உள்ள அரிசியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும்
 3. பொடித்த அரிசியை ஒரு கடாயில் போட்டு 2 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக விடவும்
 4. வெந்த அரிசியுடன் பால் சேர்த்து வேக விடவும்
 5. இதனுடன் பொடித்த பாதாம் முந்திரி பொடி கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்
 6. ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக ஆறியவுடன் பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து பின்பு பரிமாறவும்

Reviews for Rice cake in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.