வீடு / சமையல் குறிப்பு / உடனடி பாசிப்பருப்பு அல்வா

Photo of Instant Moongdal Halwa by Sowmya Sundar at BetterButter
359
0
0.0(0)
0

உடனடி பாசிப்பருப்பு அல்வா

Jul-31-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உடனடி பாசிப்பருப்பு அல்வா செய்முறை பற்றி

பாரம்பரியமாக இந்த அல்வா செய்வதென்றால் பாசிப்பருப்பை ஊற வைத்து அரைத்து செய்வார்கள். ஆனால் விழா காலங்களில் அல்லது திடீரென விருந்தினர் வரும் போது இந்த முறையில் சுலபமாக அதே சுவையுடன் இந்த அல்வாவை செய்து விடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • ராஜஸ்தான்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு-1/2 கப்
  2. நெய்-1/2 கப்
  3. வெல்லம்-1 கப்
  4. பால் -1 கப்
  5. ஏலக்காய் பொடி-1/2 டீ ஸ்பூன்
  6. பாதாம் பருப்பு-4
  7. முந்திரி பருப்பு-4

வழிமுறைகள்

  1. கடாயில் பாசிப்பருப்பை போட்டு மிதமான தீயில் பச்சை வாசனை போக நன்றாக வறுத்து கொள்ளவும்
  2. ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு பொடி ரவை பதத்திற்கு பொடி செய்து கொள்ளவும்
  3. மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்
  4. கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு நறுக்கிய முந்திரி மற்றும் பாதாமை வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்
  5. அதே கடாயில் கால் கப் நெய் விட்டு பொடித்த பாசிப்பருப்பை போட்டு ஐந்து நிமிடம் வரை வறுக்கவும்.
  6. பின் அதில் பாலை சேர்த்து வேக விடவும்.பாசிப்பருப்பு பாலில் வெந்ததும் வெல்ல நீரை விட்டு மீதமுள்ள நெய் சேர்த்து நன்றாக கிளறவும்
  7. கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்
  8. வறுத்த முந்திரி மற்றும் பாதாம் பருப்பை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்