வீடு / சமையல் குறிப்பு / பிரட் சீஸ் உருண்டைகள்

Photo of Cheesy bread balls by Athilakshmi Maharajan at BetterButter
247
0
0.0(0)
0

பிரட் சீஸ் உருண்டைகள்

Jul-31-2018
Athilakshmi Maharajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரட் சீஸ் உருண்டைகள் செய்முறை பற்றி

பிரெட்டின் சீஸை வைத்து செய்யும் ஒரு நொறுக்குத் தீனி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • அமெரிக்கன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஓரம் நீக்கிய பிரட் துண்டுகள் 12
  2. சீஸ் துருவியது ஒரு கப்
  3. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  4. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 3 பொடிதாக நறுக்கியது
  6. கொத்தமல்லி ஒரு சிறிய கட்டு பொடியாக நறுக்கியது
  7. உப்பு சுவைக்கேற்ப
  8. தண்ணீர் ஒரு கப்
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் துருவிய சீஸ், வெங்காயத்தையும் சேர்த்து கொள்ளவும்
  2. அதில் உப்பு, மிளகு தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
  3. பிரட் துண்டுகள் ஒவ்வொன்றாக எடுத்து ஒரு கப் தண்ணீரில் நனைத்து தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுக்கவும்
  4. நன்றாக பிழிந்து எடுத்த பிரட் துண்டுகளில் சீஸ் கலவையை வைத்து பந்துகளாக உருட்டவும்
  5. உருட்டிய பந்துகளை எண்ணெயில் பொரித்து நன்றாக சிவந்த பின்னர் எடுக்கவும்
  6. இப்போது மொறுமொறுப்பான குழந்தைகள் விரும்பும் பிரட் சீஸ் பந்துகள் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்