வீடு / சமையல் குறிப்பு / சைனீஸ் சிஸ்லர்

Photo of Chinese sizzler by hajirasheed haroon at BetterButter
298
5
0.0(0)
0

சைனீஸ் சிஸ்லர்

Jul-31-2018
hajirasheed haroon
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சைனீஸ் சிஸ்லர் செய்முறை பற்றி

பட்டர் பட்டர் ஆண்டு விழா ஸ்பெஷல் என் சமையலறையில் இருந்து

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சைனீஸ்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை ஃப்ரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் :arrow_down:️
  2. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  3. வெங்காயம் ஒன்று
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  5. முட்டை ஒன்று
  6. சோயா சாஸ் 2 ஸ்பூன்
  7. பெப்பர் தூள் 2 ஸ்பூன்
  8. கேரட் ஒன்று
  9. குடைமிளகாய் ஒன்று
  10. பீன்ஸ் 5
  11. வெங்காயத்தாள் சிறிதளவு
  12. முட்டைக்கோஸ் துருவியது
  13. உப்பு தேவையான அளவு
  14. தேவையான அளவு எண்ணெய்
  15. சிக்கன் ஹக்கா நூடுல்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் :arrow_down:️
  16. நூடுல்ஸ் ஒரு பாக்கெட்
  17. சிறிதாக வெட்டிய சிக்கன் துண்டுகள்
  18. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  19. உப்பு தேவையான அளவு
  20. கேரட் 1
  21. குடைமிளகாய் ஒன்று
  22. முட்டைகோஸ் துருவியது சிறிதளவு
  23. பீன்ஸ் 6
  24. வெங்காயத்தாள் சிறிதளவு
  25. பச்சை சில்லி சாஸ் ஒரு ஸ்பூன்
  26. சோயா சாஸ் 1ஸ்பூன்
  27. பெப்பர் தூள் 2 ஸ்பூன்
  28. எண்ணெய் தேவையான அளவு
  29. செஸ்வான் சிக்கன் டிரம்ஸ்டிக் செய்ய தேவையான பொருட்கள்:arrow_down:️
  30. சிக்கன் லெக் பீஸ் 2
  31. செஷ்வான் சாஸ் ஒரு கப்
  32. டொமேட்டோ சாஸ் 2 டீஸ்பூன்
  33. உப்பு சிறிதளவு
  34. சோயா சாஸ் ஒரு ஸ்பூன்
  35. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  36. வெங்காயத்தாள் சிறிதளவு
  37. எண்ணெய் தேவையான அளவு
  38. உருளைக்கிழங்கு ஃப்ரை செய்வதற்கு தேவையான பொருட்கள் :arrow_down:️
  39. உருளைக்கிழங்கு 2
  40. கான்பிளவர் மாவு 2 ஸ்பூன்
  41. உப்பு சிறிதளவு
  42. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
  43. சிக்கன் சான்ட்விச் செய்வதற்கு தேவையான பொருட்கள்
  44. பிரட் துண்டுகள் 4
  45. சிக்கன் துண்டுகள் பொடியாக
  46. கோஸ் சிறிதளவு
  47. குடை மிளகாய் பாதி
  48. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  49. உப்பு தேவையான அளவு
  50. மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  51. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  52. கரம் மசாலா அரை ஸ்பூன்
  53. எண்ணை தேவையான அளவு
  54. சிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள்:arrow_down:️
  55. பாஸ்மதி அரிசி அரை கிலோ
  56. சிக்கன் அரை கிலோ
  57. வெங்காயம் 8
  58. தக்காளி 5
  59. இஞ்சி பூண்டு விழுது 5 ஸ்பூன்
  60. பச்சை மிளகாய் 4
  61. புதினா மல்லி இலை
  62. மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  63. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  64. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  65. தயிர் அரை கப்
  66. எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன்
  67. உப்பு தேவையான அளவு
  68. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை
  69. எண்ணை தேவையான அளவு
  70. நெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டை ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊறவைத்து உப்பு தண்ணீர் எண்ணெய் சேர்த்து வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளவும்
  2. காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது உப்பு காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  4. காய்கறிகள் வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்
  5. முட்டை காய்கறிகள் வெந்தவுடன் அதில் வேக வைத்த பாசுமதி அரிசியை சேர்க்கவும்
  6. காய்கறி கலவையில் சோயா சாஸ் பெப்பர் தூள் சேர்த்து மீண்டும் கிளறி பரிமாறலாம்
  7. சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் தயார்
  8. சிக்கன் ஹக்கா நூடுல்ஸ் செய்வதற்கு நூடுல்ஸை வேகவைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளவும்
  9. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சிக்கன் துண்டுகள் உப்பு சேர்த்து வதக்கவும்
  10. காய்கறிகள் பொடியாக நறுக்கி கொள்ளவும்
  11. சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  12. காய்கறிகள் நன்கு வதங்கியவுடன் அதில் சோயா சாஸ் சில்லி சாஸ் ஆற வைத்த நூடுல்ஸ் கலந்து பெப்பர் தூள் சேர்த்து கிளறி பரிமாறலாம்
  13. சுவையான சிக்கன் ஹக்கா நூடுல்ஸ் தயார்
  14. செஸ்வான் சிக்கன் டிரம்ஸ்டிக் செய்வதற்கு இரண்டு சிக்கன் லெக்பீஸ் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும் அதில் இஞ்சி பூண்டு விழுது சிக்கன் பவுடர் உப்பு கேசரி பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும் கலந்த சிக்கன் துண்டுகளை கழுவி 20 நிமிடம் மசாலா சாரும் வரை ஊற வைக்கவும்
  15. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை பொரித்து கொள்ளவும்
  16. செஷ்வான் சாஸ் செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து பொரியவிடவும் காய்ந்த மிளகாயை தண்ணீரில் ஊறவைத்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும் அந்த பேஸ்ட்டை சேர்த்து கொதிக்க விடவும் வினிகர் ஊற்றி எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்
  17. சுவையான செஸ்வான் சாஸ் தயார்
  18. schezwan drumstick செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொரிய விட்டு அதில் டொமேட்டோ சாஸ் செஷ்வான் சாஸ் உப்பு சேர்க்கவும்
  19. சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  20. நன்கு கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் சோயா சாஸ் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து வெங்காயத்தாள் தூவி பரிமாறலாம் சுவையான செஸ்வான் சிக்கன் டிரம்ஸ்டிக் தயார்
  21. உருளைக்கிழங்கு french fries செய்வதற்கு உருளைக்கிழங்கை தோல் சீவி நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும் வெட்டிய உருளைக்கிழங்கில் கான்பிளவர் மாவு உப்பு சேர்த்து பிசைந்து ஃப்ரீசரில் ஐந்து நிமிடம் வைத்துக் கொள்ளவும்
  22. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ப்ரெட் ப்ரைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் சுவையான ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் தயார்
  23. சிக்கன் சான்விச் செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிக்கன் துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் குடை மிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும்
  24. சிக்கன் வெந்தவுடன் அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து மெள்ளக் கிளறவும்
  25. சுவையான சிக்கன் ஸ்டாப்பிங் தயார் சாண்ட்விச் செய்வதற்கு பிரெட் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்
  26. பிரெட்டின் மேல் செய்து வைத்துள்ள சிக்கன் ஸ்டாப்பிங்கை சேர்க்கவும்
  27. சான்விச் டோஸ்டரில் பிரட்டை வைத்து அதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து மூடி ரோஸ்ட் செய்யவும்
  28. சுவையான ஈஸியான சிக்கன் ப்ரெட் சாண்ட்விச் தயார்
  29. சிக்கன் பிரியாணி செய்வதற்கு முதலில் பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  30. ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை போட்டு பொரியவிடவும் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  31. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளி புதினா மல்லி இலை இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கவும்
  32. தக்காளி வதங்கியதும் அதில் சிக்கன் துண்டுகள் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தயிர் சேர்த்து வேகவிடவும்
  33. சிக்கன் துண்டுகள் முக்கால் பாகம் வெந்தவுடன் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை சேர்த்து வேக வைக்கவும்
  34. முக்கால் பாகம் வெந்தவுடன் நெய் சேர்த்து தம்மில் ஸ்லோவா 20நிமிடம் வைக்கவும் சுவையான சிக்கன் பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்