BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Anniversary special healthy feast

Photo of Anniversary special healthy feast by Krishnasamy Vidya Valli at BetterButter
0
3
5(1)
0

Anniversary special healthy feast

Jul-31-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • కలయిక
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • ప్రెజర్ కుక్
  • బేకింగ్
  • ఉడికించాలి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருப்பட்டி சத்து மாவு அல்வா தேவையானவை
  2. கருப்பட்டி ,சத்துமாவு தலா 1/4 கப்
  3. பால் முக்கால் கப்
  4. ஏலப் பொடி 2 சிட்டிகை, நெய் ஒரு மேசைக்கரண்டி, முந்திரிபருப்பு 5 முதல் 8
  5. இஞ்சி சூப்பிற்கு தேவையானவை
  6. இஞ்சி ஒரு பெரிய துண்டு
  7. தேன், எலுமிச்சைச் சாறு தலா ஒரு தேக்கரண்டி
  8. உப்பு , மிளகு பொடி, தனியா பொடி, ஜீரகம் ,வெண்ணெய் தலா அரை தேக்கரண்டி
  9. மரச்சீனி வெட்ஜஸிற்கு தேவையானவை
  10. ஒரு விரல் நீளத்திற்கு நறுக்கிய மரச்சீனிக் கிழங்கு ஒரு கப்
  11. கான்ஃப்ளவர் 2 தேக்கரண்டி
  12. இஞ்சி பூண்டு பேஸ்ட் ,உப்பு, மஞ்சள் பொடி, ஆம்சூர் பவுடர் ,கரம் மசாலா, தனியா பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி , எண்ணெய் தலா அரை தேக்கரண்டி
  13. தேங்காய் சிவப்பு அவலிற்கு தேவையானவை
  14. சிவப்பு அவல் கால் கப்
  15. தேங்காய் துருவல் 1/8 கப்
  16. உப்பு கால் தேக்கரண்டி
  17. தாளிக்க: தேங்காயெண்ணெய் கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் 1, மிளகாய் வற்றல் 1, பெருங்காயம் 4 சிட்டிகை, கருவேப்பிலை ஒரு ஆர்க்கு
  18. வரகு ப்ரூட் புலாவிற்கு தேவையானவை
  19. வரகு அரிசி கால் கப்
  20. ஆப்பிள் மாதுளை திராட்சை மற்றும் விருப்பமான பழங்கள் கால் கப், முந்திரி ,பாதாம், வால்நட், கிஸ்மிஸ் போன்ற டிரை ப்ரூட்ஸ் 1/8 கப்
  21. தாளிக்க :நெய், இஞ்சி பூண்டு பேஸ்ட் தலா அரை தேக்கரண்டி, பட்டை 1 சிறிய துண்டு, ஏலக்காய் கிராம்பு தலா 2 பச்ச மிளகாய் 1
  22. பால் கால் கப் மற்றும் குங்குமப்பூ சிறிது
  23. உப்பு கால் தேக்கரண்டி சீனி 2 சிட்டிகை
  24. சாமை முளைக்கட்டிய தானிய பிரியாணிக்கு தேவையானவை
  25. சாமை அரிசி 1/2 கப் மற்றும் முளைகட்டிய தானியங்கள் கால் கப்
  26. அரைக்க: இஞ்சி ஒரு சிறிய துண்டு, பாதாம் 5 முதல் 8, கொத்தமல்லி இலை சிறிது, தேங்காய் துருவல் 1 மேஜைக்கரண்டி, பூண்டு 2 பல், கஸகஸா பெருஞ்சீரகம் தலா 1/4 தேக்கரண்டி
  27. தாளிக்க எண்ணெய் , இஞ்சி பூண்டு விழுது தலா 1 தேக்கரண்டி, பட்டை ஒரு சிறிய துண்டு, ஏலக்காய் கிராம்பு தலா 3, பே லீப்ஸ் சிறிய துண்டு,ஸ்டார் அனீஸ் 1
  28. உப்பு முக்கால் தேக்கரண்டி
  29. மில்லட் சப்பாத்திக்கு தேவையானவை
  30. சிறுதானிய மாவு மற்றும் கோதுமை மாவு தலா கால் கப்
  31. உப்பு கால் தேக்கரண்டி
  32. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்
  33. வெள்ளரி கேரட் ரைத்தாவிற்கு தேவையானவை
  34. கேரட் மற்றும் வெள்ளரி துருவல் தலா கால் கப்
  35. தயிர் அரை கப்
  36. உப்பு -1/4 தேக்கரண்டி
  37. கான் பீஸ் பீநட் டிரை சப்ஜிக்கு தேவையானவை
  38. ஸ்வீட் கான், பச்ச பட்டாணி, பச்ச வேர்கடலை -தலா 1/4 கப்
  39. உப்பு , காஷ்மீர் சில்லி பவுடர் - தலா 1/2 தேக்கரண்டி, தனியா பொடி, சீரகப்பொடி தலா 1/4 தேக்கரண்டி
  40. தாளிக்க:எண்ணெய், சீரகம், இஞ்சி பூண்டு பேஸ்ட் தலா 1/2 தேக்கரண்டி, பட்டை 1 சிறிய துண்டு, ஏலக்காய் கிராம்பு தலா 2
  41. பாயில்ட் வெஜிடபிள் பாதாம் கிரேவிக்கு தேவையானவை
  42. அரைக்க: பாதாம் 6 முதல் 8
  43. தாளிக்க: வெண்ணெய், சீரகம், இஞ்சி பூண்டு பேஸ்ட் தலா 1/2 தேக்கரண்டி, பட்டை ஒரு சிறிய துண்டு, ஏலக்காய் கிராம்பு -தலா 2
  44. உப்பு ,காஷ்மீர் சில்லி பவுடர் தலா1/2 தேக்கரண்டி, கரம்மசாலா தனியா பொடி சீரகப்பொடி மஞ்சள் பொடி தலா 1/4 தேக்கரண்டி, கஸூரி மேத்தி 1 தேக்கரண்டி
  45. பனங்கற்கண்டு அமிர்தபாலிற்கு தேவையானவை
  46. பனங்கற்கண்டு 1 மேஜைக்கரண்டி
  47. பாதாம் மற்றும் மிளகு தலா 6 முதல் 8, ஜாதிக்காய் , ஜாதி பத்திரி மற்றும் பச்ச கற்பூரம் சிறிது, ஏலக்காய் கிராம்பு தலா 3
  48. பால் -1 கப் மற்றும் குங்குமப்பூ சிறுது.
  49. மொத்தமாக தேவையான காய்கள்
  50. வெங்காயம் உருளைக்கிழங்கு கேரட் தக்காளி தலா 2 குடைமிளகாய் 1, காலிபிளவர் சிறிய பூக்கள் 1/4 கப், பீன்ஸ் 8 முதல் 10
  51. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 1 கையளவு

வழிமுறைகள்

  1. எல்லா ரெசிபிக்கும் தேவையான பாதம் மற்றும் பச்சை வேர்க்கடலையை வெந்நீரிலும் சாமை அரிசி வரகரிசியை தண்ணீரிலும் ஊறவைக்கவும். அவலை தண்ணீர் விட்டு களைந்து வைக்கவும். கெட்டி அவலாக இருந்தால் தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்
  2. புலாவிற்கு சிறிது சூடான பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும்
  3. இஞ்சியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்
  4. மீதமான இஞ்சி சக்கையுடன் பிரியாணிக்கு அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  5. கிரேவிக்கு ஊறவைத்த பாதாமை அரைத்து கொள்ளவும்
  6. பனங்கற்கண்டு அமிர்தபாலுக்கு கொடுக்கப்பட்ட பொருட்களை அரைத்துக்கொள்ளவும்
  7. காய்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியதில் வெங்காயத்தை நான்காக பிரிக்கவும்(புலாவ், பிரியாணி, டிரை சப்ஜி மற்றும் கிரேவி). தக்காளி(கிரேவிக்கு மட்டும்) தவிர மற்ற காய்களை 1/4 பகுதியை பிரியாணிக்கும் 3/4 பகுதியை கிரேவிக்கும் பிரித்துக்கொள்ளவும்
  8. ரைத்தாவிற்கு கொடுக்கப்பட்ட கேரட் வெள்ளரி துருவல் தயிர் உப்பு சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் வெள்ளரி கேரட் ரைத்தா தயார்
  9. மரச்சீனி வெட்ஜஸ்: மரச்சீனியை தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் மைக்ரோ வேவ் அவனில் வேகவைத்து தண்ணீரை வடித்துவிட்டு கொடுக்கப்பட்ட கான்பிளவர் எண்ணெய், உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  10. மைக்ரோ வேவ் அவனை பிரீஹீட் செய்துவிட்டு மசாலா கோட் செய்த மரச்சீனியை 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். மரச்சீனி வெட்ஜஸ் தயார்
  11. மில்லட் சப்பாத்திக்கு கொடுக்கப்பட்டவற்றை வெந்நீர் விட்டு பிசைந்து சப்பாத்தியாக இட்டு தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும் அல்லது தணலில் சுட்டு எடுக்கவும்
  12. பிரஷர் குக்கரில் கிரேவிக்கு தேவையான காய்களை இரண்டு முதல் மூன்று கப் தண்ணீர் விட்டு (வேகவைத்த தண்ணீர் சூப்பிற்கு தேவை)கன்டெய்னரில் வைக்கவும். கன்டெய்னரின் பக்கவாட்டில் தண்ணீரில் வேர்கடலை போடவும் .கன்டெய்னரை ஒரு தட்டால் மூடி அதன்மேல் பச்ச பட்டாணி ஸ்வீட்கான் தண்ணீர் விடாமல் வைக்கவும். குக்கரை மூடி மூன்று விசில் வேகவைக்கவும்
  13. வெறும் கடாயில் சத்து மாவை வறுத்து ஆறவைத்து பாலில் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும்
  14. கடாயில் சிறிது தண்ணீர் சேர்த்து கருப்பட்டி போட்டு கரைய விடவும். பச்ச வாசனை போனவுடன் வடிகட்டிக்கொள்ளவும்
  15. கடாயில் சிறிது நெய்விட்டு முந்திரியை வறுத்து தனியாக வைத்து விட்டு கரைத்து வைத்த சத்து மாவை சேர்த்து கிளறவும்
  16. வடிகட்டிய கருப்பட்டி தண்ணீர் சேர்த்து சுருள கிளறவும்
  17. மீதமுள்ள நெய் சேர்த்து ஏலப்பொடி தூவி முந்திரி சேர்த்து கிளறினால் கருப்பொட்டி சத்துமாவு அல்வா தயார்
  18. தேங்காய் சிவப்பு அவல்: கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்
  19. அவல் மற்றும் உப்பு சேர்த்து கிளறினால் தேங்காய் சிவப்பு அவல் தயார்
  20. இஞ்சி சூப்:கடாயில் வெண்ணெய் சீரகம் தாளித்து இஞ்சி சாறை சேர்த்து கொதிக்கவிடவும்.
  21. பிரஷர் குக்கரில் வேக வைத்த காய்கறிகள் வெந்த தண்ணீரை சேர்த்து உப்பு மிளகு பொடி தனியா பொடி சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  22. தேன் எலுமிச்சைச் சாறு கொத்தமல்லி இலை சேர்த்தால் சுவையான இஞ்சி சூப் தயார்.
  23. வரகு ப்ரூட் புலாவ்: தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் டிரை ப்ரூட்ஸ் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்
  24. அதோடு ஊறவைத்த வரகு அரிசி உப்பு சீனி பாலில் ஊற வைத்த குங்குமப்பூ மீதமுள்ள பால் சேர்த்து எல்லாவற்றையும் ஒரு கன்டெய்னரில் 1/2 கப் தண்ணீர் விட்டு இரண்டு விசில் வேகவைத்து எடுக்கவும்
  25. குக்கரை திறந்து நறுக்கிய பழங்கள் சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் வரகு ப்ரூட் புலாவ் தயார்
  26. கான் பீஸ் பீநட் டிரை சப்ஜி: கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பச்ச வாசனை போனவுடன் வேகவைத்த வேர்கடலை, பச்ச பட்டாணி ஸ்வீட்கான் சேர்த்து கிளறவும்
  27. உப்பு மற்றும் எல்லா பொடிகளையும் சேர்த்து கிளறி கொத்தமல்லியைத் தூவினால் கான் பீஸ் பீநட் டிரை சப்ஜி தயார்
  28. சாமை முளைகட்டிய தானியங்கள் பிரியாணி: தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் மற்ற எல்லா காய்களும் சேர்த்து வதக்கவும்
  29. அரைத்த விழுது ஊறவைத்த சாமை அரிசி முளைகட்டிய தானியங்கள் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறி எல்லாவற்றையும் சேர்த்து ரைஸ் குக்கரில் குக்கிங் மோடில் வைக்கவும்
  30. கீப் வாம் வந்தவுடன் கொத்தமல்லி இலையை தூவினால் சாமை முளைகட்டிய தானியங்கள் பிரியாணி ரெடி.
  31. பாயில்ட் வெஜிடபிள் பாதாம் கிரேவி: தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து ஏற்கனவே வேகவைத்த காய்கள் உப்பு கஸூரி மேத்திமற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கிளறவும்
  32. அரைத்த பாதாம் விழுதை சேர்த்து பொட்டட்டோ மாஷர் உதவியுடன் நன்றாக மசித்துக்கொள்ளவும்
  33. ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவினால் பாயில்ட் வெஜிடபிள் பாதாம் கிரேவி தயார்
  34. பனங்கற்கண்டு அமிர்தபால்: அரைத்த விழுதை பாலில் கலந்து ஒரு கொதி விட்டு இறக்கி குங்குமப்பூ தூவினால் பனங்கற்கண்டு அமிர்தபால் தயார்
  35. செய்த எல்லாவற்றையும் அழகாக அரேஞ்ச் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Venkatasubramanian Srinivasan
Aug-01-2018
Venkatasubramanian Srinivasan   Aug-01-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்