வீடு / சமையல் குறிப்பு / பருப்பு உருண்டை மோர்க்குழம்பு

Photo of Paruppu Urundai Mor Kuzhambu by Jayasakthi Ekambaram at BetterButter
409
0
0.0(0)
0

பருப்பு உருண்டை மோர்க்குழம்பு

Jul-31-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு உருண்டை மோர்க்குழம்பு செய்முறை பற்றி

தயிரை தாளித்து செய்யும் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தயிர் 300 மில்லி
  2. துவரம்பருப்பு ஒரு ஸ்பூன்
  3. பச்சரிசி ஒரு ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் 4
  5. எண்ணெய் 1 ஸ்பூன்
  6. கடுகு ஒரு ஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  8. கருவேப்பிலை ஒரு கொத்து
  9. காய்ந்த மிளகாய் ஒன்று
  10. உப்பு தேவையான அளவு
  11. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  12. கடலைப் பருப்பு 200 கிராம்
  13. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  14. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
  15. சோம்புத் தூள் 1/2ஸ்பூன்
  16. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அரை கப்

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பையும் பச்சை அரிசியையும் கால் மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
  2. அரிசி பருப்புடன் இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்
  3. இந்த அரைத்த கலவையை தயிருடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. உப்பு மஞ்சள் தூள் கலந்து கொள்ளவும்
  5. கடுகு பொரிந்தவுடன் உளுத்தம்பருப்பை சேர்க்கவும்
  6. உளுத்தம் பருப்பு பொன்னிறமானதும் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  7. இதில் கரைத்து வைத்த தயிர் கலவையை ஊற்றவும்
  8. கொதித்தவுடன் ஆப் செய்யவும்
  9. கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  10. ஊறவைத்த கடலைப் பருப்பில் தண்ணீரை வடிகட்ட வேண்டும்
  11. அதனுடன் 2 பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சோம்பு உப்பு போட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்
  12. அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்
  13. இதை உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைக்கவும்
  14. ஆவியில் வேக வைத்த உருண்டைகளை மோர் குழம்பில் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்