வீடு / சமையல் குறிப்பு / பாலக்கீரை உருளைக்கிழங்கு தொக்கு

Photo of Aloo palak gravy by Jayasakthi Ekambaram at BetterButter
847
1
0.0(0)
0

பாலக்கீரை உருளைக்கிழங்கு தொக்கு

Jul-31-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாலக்கீரை உருளைக்கிழங்கு தொக்கு செய்முறை பற்றி

பாலைக் கீரையும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யும் தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாலக்கீரை ஒரு கட்டு
  2. உருளைக்கிழங்கு 3
  3. பூண்டு ஆறு பற்கள்
  4. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  5. பச்சை மிளகாய் 2
  6. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  7. தனியா தூள் ஒரு ஸ்பூன்
  8. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  9. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. என்னை 4 ஸ்பூன்
  12. கஸ்தூரி மேத்தி அரைஸ்பூன்
  13. பொடியாக நறுக்கிய வெங்காயம் 100 கிராம்
  14. தக்காளி விழுது 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலக் கீரையை நன்றாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு வெங்காயம் பாலக்கீரையை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்
  3. அதை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்
  4. 3 விசில் வரும் வரை உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைக்கவும்
  5. உருளைக்கிழங்கை நன்றாக ஆற வைத்து கட் செய்து கொள்ளவும்
  6. அதனை இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் தூள் சோம்பு தூள் உப்பு போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்
  7. ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு தக்காளி விழுதை போட்டு வதக்கவும்
  8. இதனுடன் தனியாத்தூள் கரம் மசாலா உப்பு போட்டு வதக்கவும்.
  9. அரைத்த கீரை விழுதை ஊற்றவும்
  10. வறுத்து வைத்த உருளைக்கிழங்கை இதனுடன் சேர்க்கவும்
  11. கஸ்தூரி மேத்தியை கையால் தூள் செய்து சேர்க்கவும்
  12. 5 நிமிடம் கொதிக்கவைத்து அடுப்பை ஆப் செய்யவும்
  13. இது சப்பாத்தி, நான் இதனுடன் தொட்டுக்கொள்ள சரியாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்