வீடு / சமையல் குறிப்பு / போஹா சிவ்டா

Photo of Poha Chivda by Jayasakthi Ekambaram at BetterButter
896
0
0.0(0)
0

போஹா சிவ்டா

Jul-31-2018
Jayasakthi Ekambaram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

போஹா சிவ்டா செய்முறை பற்றி

அவல் வைத்து செய்யும் ஒரு ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • குஜராத்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவல் 200 கிராம்
  2. வேர்க்கடலை 2 ஸ்பூன்
  3. பொட்டுக்கடலை ஒரு ஸ்பூன்
  4. முந்திரிப்பருப்பு 6
  5. காய்ந்த மிளகாய் ஒன்று
  6. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  7. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  8. கடுகு ஒரு ஸ்பூன்
  9. சீரகம் அரை ஸ்பூன்
  10. கறிவேப்பிலை இரண்டு கொத்து
  11. தேங்காய்த் துண்டுகள் 10
  12. தூள் உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அவலை வெறும் வாணலியில் நன்றாக 5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்
  2. பொட்டுக்கடலையையும் வறுத்துக்கொள்ளவும்
  3. அவலையும் வேர்க்கடலையும் தனித்தனி தட்டில் வைத்துக் கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துண்டுகளை வறுத்து அதையும் தனியாக வைக்கவும்
  5. வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு கடுகு போடவும்
  6. கடுகு பொரிந்தவுடன் சீரகத்தையும் காய்ந்த மிளகாயையும் சேர்க்கவும்
  7. பிறகு பெருங்காயத்தையும் கறிவேப்பிலையும் சேர்த்து வறுக்கவும்
  8. இப்போது வாணலியில் ஏற்கெனவே வறுத்து வைத்த அவல் வேர்க்கடலை தேங்காய்த் துண்டுகள் பொட்டுக்கடலை எல்லாவற்றையும் போட்டு கலக்கவும்
  9. வறுத்து வைத்த அவலையும் அதில் கொட்டவும்
  10. எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்து ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்
  11. ஆற வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் அது ஸ்நாக்ஸாக பயன்படும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்