வீடு / சமையல் குறிப்பு / மஞ்சள் நிற பீட்ரூட் புலாவ்

Photo of Yellowish beetroot pulao by poorani Kasiraj at BetterButter
366
1
0.0(0)
0

மஞ்சள் நிற பீட்ரூட் புலாவ்

Jul-31-2018
poorani Kasiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மஞ்சள் நிற பீட்ரூட் புலாவ் செய்முறை பற்றி

￰பீட்ரூட்டின் சிவப்பு அதிகம் ஆனால் சில குழந்தைகள் விரும்புவது இல்லை...இதை ட்ரை பண்ணி பாருங்க

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 250கி
  2. வெங்காயம் 1
  3. பீட்ரூட் 1
  4. தக்காளி 1
  5. பட்டாணி 3 ஸ்பூன்
  6. உருளைக்கிழங்கு 1
  7. கறிவேப்பில்லை
  8. புதினா
  9. மல்லியில்லை
  10. நெய் 3 ஸ்பூன்
  11. உப்பு
  12. மிளகாய் 2
  13. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  14. மஞ்சள் தூள் 1/8 ஸ்பூன்
  15. பட்டை 1 இன்ச்
  16. ஏலக்காய் 1
  17. ஜாதிபத்திரி 1/2
  18. கடல் பாசி சிறிது
  19. சோம்பு
  20. சீரகம்
  21. பிரியாணி இலை 1

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்.வெங்காயத்தை நீள வாக்கில், பீட்ரூட்டை சதுரங்களலாக வெட்டிக்கொள்ளவும்
  2. நறுமண பொருட்களையும் தயாராக எடுத்து கொள்ளவும்.
  3. குக்கரில் நெய் விட்டு நறுமணன பொருளை சேர்க்கவும்.பின்னர் வெங்காயம் , வாதகிக்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  4. பீட்ரூட், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
  5. உப்பு மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்
  6. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.அடுப்பு முழு தீயில் இருக்கவேண்டும்.
  7. அரிசியை கொதித்தவுடன் போடவும்.தண்ணீர் வத்த வேண்டும் கிழ நீர் சிறிது இருக்கவும் வேண்டும். தண்ணீர் ஆவியானதும் குக்கரை மூடி விட வேண்டும்.அடுப்பை சிம் இல் வைத்து 8- 10 நிமிடம் வைக்க வேண்டும்.
  8. பின்னர் ஆவி அடங்கிய பின் குக்கரை திறந்து நன்கு கிளறவேண்டும். மஞ்சள் நிறபீட்ரூட் புலாவ் ரெடி.புதினா கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்