வீடு / சமையல் குறிப்பு / சோயா சங்ஸ் மசால்

Photo of Soya chunks masal by Surya Rajan at BetterButter
508
1
0.0(0)
0

சோயா சங்ஸ் மசால்

Aug-01-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா சங்ஸ் மசால் செய்முறை பற்றி

புரதச்சத்து நிறைந்த உணவு . சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா சங்ஸ் : 1 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
  6. கரம் மசாலா 1/2 மேசைக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது 1/2 மேசைக்கரண்டி
  8. கொத்தமல்லி தழை சிறிதளவு
  9. சோம்பு சிறிதளவு
  10. பட்டை 1
  11. எண்ணெய் 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்து அதில் சோயா சாங்ஸ் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  2. பின் அதனை ஆற வைத்து அதிகப்படியான தண்ணீரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை சோம்பு பொடி யாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. பின் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்
  6. தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
  7. தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
  8. மசாலாவின் பச்சை வாசனை போன பின் பிழிந்து எடுத்து வைத்துள்ள சோயா சங்ஸ் சேர்த்து கிளறவும்
  9. இரண்டு நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்