பருப்பு உருண்டை குழம்பு | parupu urundai kozambu in Tamil

எழுதியவர் kala sriram  |  1st Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of parupu urundai kozambu by kala sriram at BetterButter
பருப்பு உருண்டை குழம்புkala sriram
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1

0

பருப்பு உருண்டை குழம்பு recipe

பருப்பு உருண்டை குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make parupu urundai kozambu in Tamil )

 • உற வைக்க : 1/2 கப் கடலை பருப்பு, 1/2 கப் துவரம் பருப்பு , 2 காய்ந்த மிளகாய் இவற்றை அரைமணி நேரம் ஊறவைத்து கொரகொரவென அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்
 • 1 பெரிய வெங்காயம் பொடியாக அரிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்த் மாவில் கலக்கி வைக்கவும்
 • குழம்பிற்கு : எலுமிச்சம் அளவு புளி ஊறவைத்து 3 டம்ப்ளர் தண்ணீர் விட்டு கரைசல் ரெடி செய்து கொள்ளவும். சாம்பார் பொடி 11/2 ஸ்பூன், உப்பு 1 ஸ்பூன், மஞ்சள் தூள், கறிவேப்பிலை புளித்தண்ணீரில் கலந்து வைத்து கொள்ளவும்
 • தாளிக்க : 1 ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம் தாளிக்க
 • 1/4 ஸ்பூன் வெந்தய பவுடர் ( வெந்தயத்தை வெறும் வாணலியில் 1 நிமிடம் வறுத்து ஆறியதும் பவுடராக்கி வைத்துகொண்டால் தேவையான பொழுது உபயோகிக்கலாம்

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி | How to make parupu urundai kozambu in Tamil

 1. அகலமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி எண்னெய் காய்ந்ததும் தாளிக்க கொடுக்க பட்டிருக்கும் பொருட்களை சேர்த்து தாளிக்கவும்
 2. சாம்பார் பொடி உப்பு சேர்த்து கலக்கி வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றவும்.
 3. குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி குழம்பில் போடவும். ஒரே இடத்தில் போடக்கூடாது. ஒவ்வொரு உருண்டைக்கும் இடையில் கொஞ்சம் இடைவெளி இருக்கட்டும்.
 4. குழம்பில் கொதித்த உருண்டைகள் வெந்ததும் மேலெழும்பி வரும். குழம்பும் கெட்டி பட்டிருக்கும். அடுப்பை அணைத்து விட்டு வெந்தய பவுடர் சேர்த்து கலக்கவும். வெந்தயம் சேர்த்திருப்பதால் ஆறியதும் மூடவும்

எனது டிப்:

புளி கரைசல் நீர்க்க இருந்தால் தான் உருண்டைகள் போட்டதும் குழம்பு கெட்டி படும். மாவு கரைத்து ஊற்ற தேவையில்லை. விரும்புகிறவர்கள் மாவு அரைக்கும் பொழுது சோம்பு சேர்க்கலாம்

Reviews for parupu urundai kozambu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.