வீடு / சமையல் குறிப்பு / காடைக் குழம்பு

Photo of Quail Curry by Laaftila Sanonya at BetterButter
562
2
0.0(0)
0

காடைக் குழம்பு

Aug-01-2018
Laaftila Sanonya
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காடைக் குழம்பு செய்முறை பற்றி

முருங்கைக்காய் போட்ட காடைக் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் - 2
  2. தக்காளி - 1
  3. இஞ்சி - 2 துண்டு
  4. தயிர் - சிறிதளவு
  5. பச்சை மிளகாய் - 5
  6. பூண்டு - 7 பல்
  7. கசகசா - சிறிதளவு
  8. பட்டை - சிறிதளவு
  9. லவங்கம் - சிறிதளவு
  10. கருவேப்பிலை - சிறிதளவு
  11. உப்பு - தேவையான அளவு
  12. குழம்பு மசாலா - 1 1/2 மேசைக்கரண்டி
  13. எண்ணெய் - தேவையான அளவு
  14. காடைக் கறி - 1/4 கி கி
  15. முருங்கைக்காய் - 2

வழிமுறைகள்

  1. முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. முருங்கைக்காயை சுத்தப்படுத்தி அறிந்து வைத்துகொள்ள வேண்டும்.
  3. பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  4. அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், கசகசா, கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
  5. பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
  6. அதன் பிறகு இஞ்சி, பூண்டு, தயிர் விழுதை அதில் போட வேண்டும்.
  7. பிறகு காடைக் கறியை அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
  8. பின்பு சிறிது தண்ணீர் ஊற்றி குழம்பு மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும்.
  9. கொதித்து வரும் போது அறிந்து வைத்துள்ள முருங்கைக்காய் சேர்க்கவும்.
  10. நன்கு கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்