BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் டிக்கா சப்பாத்தி ரோல்

Photo of Paneer Tikka Chapathi Roll by Sowmya Sundar at BetterButter
57
1
0(0)
0

பன்னீர் டிக்கா சப்பாத்தி ரோல்

Aug-01-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் டிக்கா சப்பாத்தி ரோல் செய்முறை பற்றி

பன்னீர் டிக்கா செய்து மீதமான சப்பாத்தியில் சுருட்டி செய்யும் டிஷ் இது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • భారతీయ
  • అల్పాహారం మరియు బ్రంచ్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மீதமான சப்பாத்தி-4
  2. பன்னீர் துண்டுகள் 1/2 கப்
  3. எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  4. மசாலா செய்ய
  5. தயிர்-1/4 கப்
  6. கடலை மாவு-3 டேபிள் ஸ்பூன்
  7. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  8. மிளகாய் தூள் -1/2 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. கரம் மசாலா தூள்-1/4 டீஸ்பூன்
  11. மல்லி தூள்-1/2 டீஸ்பூன்
  12. ஆம்சூர் பொடி-1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் தயிர் ,கடலை மாவு மற்றும் அனைத்து பொடி வகைகள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  2. அதில் பன்னீர் துண்டுகளை கலந்து பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு மாரிக்னேட் செய்த பன்னீர் மசாலாவை போட்டு சிம்மில் வைத்து நன்றாக ரோஸ்ட் செய்யவும்
  4. சப்பாத்தியை சூடுபடுத்தி அதில் இந்த பன்னீர் டிக்காவை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வைத்து நன்றாக ரோல் செய்யவும். சப்பாத்திக்கடியில் அலுமினியம் பாயில் வைத்தும் சுருட்டலாம்.
  5. பன்னீர் டிக்கா சப்பாத்தி ரோல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்