Photo of Carrot Kheer by Jayasakthi Ekambaram at BetterButter
285
1
0.0(0)
0

கேரட் கீர்

Aug-01-2018
Jayasakthi Ekambaram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் கீர் செய்முறை பற்றி

கேரட்டை பாலில் அரைத்து செய்யும் ஒரு பானகம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் 2
  2. பால் அரை லிட்டர்
  3. முந்திரிப்பருப்பு 3
  4. பாதாம் பருப்பு 3
  5. ஏலக்காய்த் தூள் அரை ஸ்பூன்
  6. சர்க்கரை 50 கிராம்
  7. நெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய்யை ஊற்றவும்
  2. நெய் சூடானதும் அதில் முந்திரிப் பருப்பை வறுக்கவும்
  3. முந்திரிப்பருப்பை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்
  4. அடுப்பை மெல்லிய தீயில் வைத்து பாலை நன்றாக சுண்ட காய்ச்சவும்
  5. கேரட்டை துருவிக் கொள்ளவும்
  6. வாணலியில் உள்ள நெய்யில் கேரட்டை நன்றாக வதக்கவும்
  7. பாதாம்பருப்பை சுடு நீரில் ஊறவைத்து தோலை உரித்து கொள்ளவும்
  8. பாதாம் பருப்பை மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்
  9. கேரட்டை ஆற வைத்து முந்திரியுடன் சேர்த்து மிக்ஸியில் பாலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  10. அரைத்த கேரட் விழுதை பாலில் ஊற்றி நன்றாக கிளறவும்
  11. ஏலக்காய் தூளை சேர்த்துக் கொள்ளவும்
  12. நன்றாக சுண்டியவுடன் ஒரு டம்ளரில் ஊற்றவும்
  13. வெட்டி வைத்த பாதாம் பருப்பை மேலே தூவி அலங்கரிக்கவும்
  14. இதை சூடாகவோ அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ச்சியாகவோ அருந்தலாம்
  15. பால் கலந்து இருப்பதால் இது புரோட்டின் நிறைந்த பானம் ஆகும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்