வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை முருங்கை காரக்குழம்பு

Photo of Grounnut Drumstick Kara Kuzhambu by Jayasakthi Ekambaram at BetterButter
366
1
0.0(0)
0

வேர்க்கடலை முருங்கை காரக்குழம்பு

Aug-01-2018
Jayasakthi Ekambaram
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை முருங்கை காரக்குழம்பு செய்முறை பற்றி

வேர்க்கடலையும் முருங்கைக்காயும் சேர்த்து செய்யும் காரக்குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை வேர்க்கடலை 150 கிராம்
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் 100 கிராம்
  3. பொடியாக நறுக்கிய தக்காளி 100 கிராம்
  4. நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
  5. கடுகு ஒரு ஸ்பூன்
  6. சீரகம் அரை ஸ்பூன்
  7. வெந்தயம் கால் ஸ்பூன்
  8. குழம்பு மிளகாய்த்தூள் 5 ஸ்பூன்
  9. தேங்காய் விழுது 2 டீஸ்பூன்
  10. கறிவேப்பிலை ஒரு கொத்து
  11. முருங்கைக்காய் 1
  12. நசுக்கிய பூண்டு 6 பல்
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சை வேர்க்கடலையை சுடு தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. புளியை தண்ணீர் விட்டு கரைத்து அதில் மிளகாய் தூளை கலந்து கொள்ளவும்
  3. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வேர்க்கடலையை குக்கரில் நன்றாக வேக வைக்கவும்
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்
  5. எண்ணெய் சூடானதும் கடுகு தாளிக்கவும்
  6. கடுகு பொரிந்ததும் சீரகம் வெந்தயம் சேர்க்கவும்
  7. நசுக்கி வைத்துள்ள பூண்டை சேர்க்கவும்
  8. வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  9. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை போட்டு வதக்கவும்
  10. தக்காளி நன்றாக கூழ் ஆகும் வரை வதக்கவும்
  11. முருங்கைக்காயை போட்டு வதக்கவும்
  12. கருவேப்பிலை சேர்த்த பின்பு புளிக்கரைசலை ஊற்றவும்
  13. உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்
  14. வேகவைத்த வேர்க்கடலை தண்ணீரில்லாமல் சேர்க்கவும்
  15. தேங்காய் விழுதை சேர்க்கவும்
  16. அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்
  17. கெட்டி பதம் வந்தவுடன் அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்