மெது வடை | Medhu Vadai in Tamil

எழுதியவர் Priya Alagappan  |  6th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Medhu Vadai by Priya Alagappan at BetterButter
மெது வடைPriya Alagappan
  • ஆயத்த நேரம்

    25

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

126

0

மெது வடை recipe

மெது வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Medhu Vadai in Tamil )

  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • சுவைக்கேற்ற உப்பு
  • கறிவேப்பிலை - கொஞ்சம் (பொடியாக நறுக்கப்பட்டது)
  • இஞ்சி - சிறிய துண்டு ஒன்று
  • பச்சை மிளகாய் - 3
  • உளுந்து - 200 கிராம்

மெது வடை செய்வது எப்படி | How to make Medhu Vadai in Tamil

  1. உளுந்தைக் கழுவி 1ல் இருந்து 2 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும். தண்ணீரை வடிக்கட்டிவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. கிரைண்டரில் ஊறவைத்த பருப்புடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும்.
  3. தண்ணீர் தெளித்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் ஊற்றவேண்டாம், வடை அதிக எண்ணெயை இழுத்துக்கொள்ளும். மாவு அடர்த்தியாக இருக்கவேண்டும். தண்ணீராக இருக்கக்கூடாது.
  4. அப்படிச் செய்ததும், கிரைண்டரில் இருந்து மாவை எடுத்துவிடவும்.
  5. இப்போது நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு சேர்க்கவும்.
  6. மாவைக் கைகளால் நன்றாகக் கலந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு கைகளை நனைத்துக்கொள்ளவும்.
  7. ஒரு சிப் லாக் கவரை அல்லது வாழையிலையை எடுத்து எண்ணெய் தடவிக்கொள்ளவும்.
  8. கொஞ்சமாக மாவை எடுத்து ஒரு கவரில் வைக்கவும் மையத்தில் ஒரு ஓட்டையைப் போடவும்.
  9. போதுமான எண்ணெயுடன் வானலியைச் சூடுபடுத்தி எடுத்து மெதுவாக வடையைப் போட்டு பொரித்துக்கொள்ளவும்.
  10. மிதமானத் தீயில் வடை பொன்னிறமாகும்வரை பொரித்து எடுக்கவும்.
  11. வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யூ பேப்பரில் வடிக்கட்டவும்.
  12. மொறுமொறுப்பான மிருதுவான வடையின் சுவையை உண்டு மகிழவும்.

Reviews for Medhu Vadai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.