Photo of Medhu Vadai by Priya Alagappan at BetterButter
1518
19
5.0(0)
0

மெது வடை

Jun-06-2016
Priya Alagappan
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உளுந்து - 200 கிராம்
  2. பச்சை மிளகாய் - 3
  3. இஞ்சி - சிறிய துண்டு ஒன்று
  4. கறிவேப்பிலை - கொஞ்சம் (பொடியாக நறுக்கப்பட்டது)
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உளுந்தைக் கழுவி 1ல் இருந்து 2 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும். தண்ணீரை வடிக்கட்டிவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. கிரைண்டரில் ஊறவைத்த பருப்புடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும்.
  3. தண்ணீர் தெளித்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் ஊற்றவேண்டாம், வடை அதிக எண்ணெயை இழுத்துக்கொள்ளும். மாவு அடர்த்தியாக இருக்கவேண்டும். தண்ணீராக இருக்கக்கூடாது.
  4. அப்படிச் செய்ததும், கிரைண்டரில் இருந்து மாவை எடுத்துவிடவும்.
  5. இப்போது நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு சேர்க்கவும்.
  6. மாவைக் கைகளால் நன்றாகக் கலந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு கைகளை நனைத்துக்கொள்ளவும்.
  7. ஒரு சிப் லாக் கவரை அல்லது வாழையிலையை எடுத்து எண்ணெய் தடவிக்கொள்ளவும்.
  8. கொஞ்சமாக மாவை எடுத்து ஒரு கவரில் வைக்கவும் மையத்தில் ஒரு ஓட்டையைப் போடவும்.
  9. போதுமான எண்ணெயுடன் வானலியைச் சூடுபடுத்தி எடுத்து மெதுவாக வடையைப் போட்டு பொரித்துக்கொள்ளவும்.
  10. மிதமானத் தீயில் வடை பொன்னிறமாகும்வரை பொரித்து எடுக்கவும்.
  11. வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யூ பேப்பரில் வடிக்கட்டவும்.
  12. மொறுமொறுப்பான மிருதுவான வடையின் சுவையை உண்டு மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்