வீடு / சமையல் குறிப்பு / கொண்டைகடலை எலுமிச்சை சாதம்

Photo of Channa Lemon Rice by Sowmya Sundar at BetterButter
361
0
0.0(0)
0

கொண்டைகடலை எலுமிச்சை சாதம்

Aug-02-2018
Sowmya Sundar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொண்டைகடலை எலுமிச்சை சாதம் செய்முறை பற்றி

கொண்டைகடலை சேர்த்து செய்த சத்தான லெமன் சாதம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொண்டைகடலை-1/2 கப்
  2. வடித்த சாதம் - 1 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. கறிவேப்பிலை பொடி-1 டேபிள் ஸ்பூன்
  5. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  6. பெருங்காய தூள் -1/4 டீஸ்பூன்
  7. வெந்தய பொடி-1/4 டீஸ்பூன்
  8. எலுமிச்சை சாறு-1 டேபிள் ஸ்பூன்
  9. கொத்தமல்லி தழை சிறிது
  10. நறுக்கிய பச்சை மிளகாய்-2
  11. இஞ்சி நறுக்கியது -1 டீஸ்பூன்
  12. நல்லெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  13. கடுகு-1 டீஸ்பூன்
  14. உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
  15. கடலைப்பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
  16. வறுத்த வேர்க்கடலை- 1 டேபிள் ஸ்பூன்
  17. முந்திரி பருப்பு-6
  18. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. கொண்டைகடலையை பத்து மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து வடித்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள்,உப்பு, வெந்தய பொடி மற்றும் பெருங்காயம் எண்ணெயில் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைத்து விடவும்.
  3. இதனுடன் வடித்த சாதம் , கறிவேப்பிலை பொடி மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  4. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்