BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / எக் சன்னா பொடிமாஸ்

Photo of Egg Channa Scramble by Banupriya Jawahar at BetterButter
0
0
0(0)
0

எக் சன்னா பொடிமாஸ்

Aug-02-2018
Banupriya Jawahar
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எக் சன்னா பொடிமாஸ் செய்முறை பற்றி

புரதச்சத்து மிக்க முட்டை மற்றும் கொண்டைக்கடலை சேர்த்து செய்த சைட் டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளை (அ) ப்ரௌன் சுண்டக்கடலை 1 கைப்பிடி
  2. முட்டை 2
  3. பெல்லாரி 1 (பெரியது)
  4. தக்காளி 1 (சிறியது)
  5. கரம் மசாலா தூள் 1/4 தேக்கரண்டி
  6. மல்லிப்பொடி 1/4 தேக்கரண்டி
  7. சீரகப்பொடி 1/4 தேக்கரண்டி
  8. மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
  9. சாம்பார் பொடி 1/4 தேக்கரண்டி
  10. ப.மிளகாய் 1
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணைய் 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை முந்தைய நாள் இரவு ஊற வைக்கவும்
  2. ஊறிய கொண்டைக்கடலையை சுத்தம் செய்து குக்கரில் போடவும்.
  3. கடலை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  4. சீரகத்தூள், மல்லிப்பொடி, கரம் மசாலா தூள் சேர்க்கவும்
  5. குக்கரை மூடி ஐந்து விசில் விடவும்.
  6. கனத்த கிண்ணத்தில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள் தூள், முட்டை 2 சேர்த்து நுரை வர அடித்துக் கொள்ளவும்.
  7. ஒரு வாணலியில் எண்ணைய் ஊற்றி சூடேறியதும் பொடியாக அரிந்த வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  9. நறுக்கிய ப. மிளகாய் சேர்க்கவும்
  10. வெங்காயம், தக்காளி வதங்கியதும் அடித்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து கிண்டவும்.
  11. முட்டை தனித்தனியாக பிரிந்து வரும் நேரத்தில் வேக வைத்த கொண்டைக் கடலையை சேர்க்கவும்.
  12. வெங்காயம், தக்காளி கலவை, முட்டை மற்றும் கடலை நன்கு கலந்து வருமாறு கிளறவும்.
  13. இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்
  14. அவ்வப்போது கிளறி விடவும்
  15. விருப்பப்பட்டால் மல்லித்தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்