வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை மசாலா

Photo of Peanut  masala by Krishnasamy Vidya Valli at BetterButter
285
0
0.0(0)
0

வேர்கடலை மசாலா

Aug-02-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை மசாலா செய்முறை பற்றி

புரதம் அதிகம் நிறைந்த வேர்கடலையில் செய்யும் சைட்டிஷ் வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பச்ச வேர்கடலை -1/4 கப்
  2. வெங்காயம் -1
  3. தக்காளி 1
  4. உருளைக்கிழங்கு -1
  5. உப்பு 1/2 தேக்கரண்டி
  6. சோலே மசாலா பவுடர்/கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  7. மஞ்சள் பொடி ஆம்சூர் பவுடர் , தனியா பொடி, சீரகப்பொடி காஷ்மீர் சில்லி பவுடர் -தலா 1/4 தேக்கரண்டி
  8. கஸூரி மேத்தி -1/2 தேக்கரண்டி
  9. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 1/2 தேக்கரண்டி
  10. தாளிக்க
  11. வெண்ணெய்/நெய்/எண்ணெய் -1 தேக்கரண்டி
  12. பட்டை -1 சிறிய துண்டு
  13. ஏலக்காய் கிராம்பு -தலா 2
  14. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வேர்கடலை உருளைக்கிழங்கையும் குக்கரில் நன்றாக வேகவைத்து எடுக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
  5. சிறிது தண்ணீர் உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து வதக்கவும்
  6. வேகவைத்த கடலையை சேர்த்து கிளறவும்
  7. கஸூரி மேத்தி சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  8. கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்