வீடு / சமையல் குறிப்பு / மிக்சட் தால் ஃப்ரை

Photo of Mixed Dal Fry by Sowmya Sundar at BetterButter
288
0
0.0(0)
0

மிக்சட் தால் ஃப்ரை

Aug-02-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிக்சட் தால் ஃப்ரை செய்முறை பற்றி

பலவகை பருப்பு வகைகள் சேர்த்து செய்யும் ஆரோக்கியமான தால் இது. சப்பாத்தி மற்றும் ரைஸ் வெரைட்டிக்கு ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிபருப்பு- 1/2 கப்
  2. துவரம் பருப்பு-1/4 கப்
  3. கடலை பருப்பு-1/4 கப்
  4. மசூர் பருப்பு-1/4 கப்
  5. எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்+ 1 டீஸ்பூன்
  6. சீரகம்-1 டீஸ்பூன்
  7. மிளகாய் வற்றல்-2
  8. பச்சை மிளகாய்- 2
  9. இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள்-1/2 டீ ஸ்பூன்
  11. வெங்காயம்-1
  12. தக்காளி-1
  13. பச்சை பட்டாணி-1/4 கப்
  14. உப்பு தேவையான அளவு
  15. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. பருப்பு வகைகள் களைந்து விட்டு தண்ணீர் விட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து குக்கரில் வேக வைத்து கொள்ளவும்
  2. பச்சை பட்டாணி தனியாக தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் வரை வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகாய் வற்றல் தாளித்து வெங்காயம் ,தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.வெந்த பச்சை பட்டாணி சேர்த்து கொள்ளவும்
  4. பின் வேக வைத்த பருப்பு வகைகள் மற்றும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்