வீடு / சமையல் குறிப்பு / சென்னா மசாலா

Photo of Quick Channa Masala by Athilakshmi Maharajan at BetterButter
135
0
0.0(0)
0

சென்னா மசாலா

Aug-02-2018
Athilakshmi Maharajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னா மசாலா செய்முறை பற்றி

உணவகத்தில் கிடைப்பது போல் சுவையாக சென்னா மசாலா சாப்பிட வேண்டுமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எட்டு மணி நேரம் ஊற வைத்து வேக வைத்த கொண்டைக்கடலை ஒரு கப்
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. மசாலா அரைப்பதற்கு
  4. தக்காளி-2 நறுக்கியது
  5. வெங்காயம் 2 நறுக்கியது
  6. பட்டை ஒன்று
  7. கிராம்பு ஐந்து
  8. ஏலக்காய் 4
  9. இஞ்சி ஒரு துண்டு
  10. பூண்டுப்பற்கள் 8
  11. சென்னா மசாலா தூள் 3 டீஸ்பூன்
  12. தனியாத்தூள் 3 டீஸ்பூன்
  13. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  14. உப்பு சுவைக்கேற்ப
  15. கொத்தமல்லி இலை அலங்கரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக வதக்கவும்
  2. வதக்கியவற்றை நன்றாக விழுதாக அரைக்கவும்
  3. ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
  4. அரைத்த மசாலாவை அதில் சேர்க்கவும்
  5. இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், சென்னா மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்
  6. எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்
  7. இதில் வேக வைத்த கொண்டைக் கடலையை போடவும்
  8. அதில் 2 கப் தண்ணீர் ஊற்றவும்
  9. குக்கரை மூடி போட்டு மூடி 5 விசில் வைத்து இறக்கவும்
  10. மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
  11. இப்போது உணவகத்தில் சாப்பிடுவதை போல சுவையான புரோட்டின் நிறைந்த சென்னா மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்