வீடு / சமையல் குறிப்பு / பச்சை பட்டாணி சுண்டல்

Photo of Green peas Sundal by Jayasakthi Ekambaram at BetterButter
547
0
0.0(0)
0

பச்சை பட்டாணி சுண்டல்

Aug-02-2018
Jayasakthi Ekambaram
270 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை பட்டாணி சுண்டல் செய்முறை பற்றி

பட்டாணியை ஊற வைத்து வேக வைத்து செய்யும் சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உலர்ந்த பச்சைக்கலர் பட்டாணி கால் கிலோ
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று
  3. எண்ணெய் 2 ஸ்பூன்
  4. பட்டை ஒன்று
  5. கிராம்பு-2
  6. மிளகாய்த்தூள் முக்கால் டீஸ்பூன்
  7. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் முக்கால் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உலர்ந்த பச்சை பட்டாணியை கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. நான்கு மணி நேரத்திற்கு பிறகு குக்கரில் பட்டாணியை உப்பு போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
  3. ஆவி அடங்கிய பின் குக்கரை திறந்து அதில் உள்ள தண்ணீரை வடிகட்டவும்
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்
  5. எண்ணெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும்
  6. பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
  7. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சோம்புத் தூள் சேர்க்கவும்
  8. அதில் வெந்த பட்டாணியை கொட்டவும்
  9. மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  10. சிறிது தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  11. தண்ணீர் வற்றிய பிறகு கொத்தமல்லித் தழை தூவவும்
  12. அடுப்பை ஆஃப் செய்து பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்
  13. இது வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற புரோட்டின் உணவு ஆகும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்