மாங்கா கேசரி | Mango Kesari in Tamil

எழுதியவர் Priya Srinivasan  |  6th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mango Kesari by Priya Srinivasan at BetterButter
மாங்கா கேசரிPriya Srinivasan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

39

0

மாங்கா கேசரி recipe

மாங்கா கேசரி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mango Kesari in Tamil )

  • 1 கப் ரவை
  • 1 கப் புத்தம்புதிய அடர்த்தியான மாங்கூழ்
  • 1 கப் சர்க்கரை
  • 4-5 ஏலக்காய் பற்கள்
  • 6 தேக்கரண்டி வெண்ணெய்
  • பருப்புகளும் உலர் திராட்சைகளும் அலங்காரத்திற்காக ( நான் பாதாம் சீவல்களையும் கலிபோர்னியா உலர் திராட்சைகளையும் பயன்படுத்தினேன்)

மாங்கா கேசரி செய்வது எப்படி | How to make Mango Kesari in Tamil

  1. ஓவனை 180Cக்கு ப்ரீ ஹீட் செய்யவும். மாங்கூழ், சர்க்கரை, ஏலக்காய், வெண்ணெய் ஆகியவற்றை ஒரு பிளண்டரில் எடுத்து நன்றாக அடித்துக்கொள்ளவும்.
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் அடித்த மாங்கூழையும் ரவையையும் ஒன்றாகக் கலந்துகொள்க. பேக் செய்யும் டிரேயில் வெண்ணெய் தடவிக்கொள்க. நான் 8 இன்ச் பேனைப் பயன்படுத்தினேன். ரவை.மாங்கூழ் மாவை அதனுள் ஊற்றவும். கொஞ்சம் பருப்புகளையும் உலர் திராட்சைகளையும் அவற்றின் மீது வைத்து அலங்கரிக்கவும்.
  3. 180Cல் 15 நிமிடங்கள் பேக் செய்யவும். வெப்ப நிலையை 150Cக்குக் குறைத்து மேலும் 18-20 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  4. கேசரி பாத்திரத்தின் பக்கவாட்டிலிருந்து விலகியிருக்கவேண்டும், ஒரு பல் குத்தும் குச்சியை மையத்தில் நுழைத்தால் சுத்தமாக வெளிவரவேண்டும்.
  5. அது 15 நிமிடங்களுக்கு ஆறவேண்டும். வெளியில் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

தனித்தனியாகப் பரிமாறுவதற்குத் தனித்தனி மஃபின் கப்களிலும் அவற்றை நீங்கள் பேக் செய்யலாம்.

Reviews for Mango Kesari in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.