வீடு / சமையல் குறிப்பு / Protein Rich cotton Milk

Photo of Protein Rich cotton Milk by Juvaireya R at BetterButter
0
2
5(1)
0

Protein Rich cotton Milk

Aug-02-2018
Juvaireya R
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • మీడియం/మధ్యస్థ
 • పిల్లలకు నచ్చే వంటలు
 • తమిళనాడు
 • ఉడికించాలి
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. சிறிய பருத்தி விதைகள் ஒரு கப்
 2. 3 மேஜைக்கரண்டி பச்சை அரிசி
 3. வெல்லம் ஒன்றரை கப்
 4. ஏலக்காய்-3
 5. சுக்கு பொடி அரை தேக்கரண்டி
 6. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
 7. மிளகு தூள் கால் தேக்கரண்டி
 8. தேங்காய் துருவல் அரை கப்
 9. தண்ணீர் தேவையான அளவு
 10. ஒரு சிட்டிகை உப்பு

வழிமுறைகள்

 1. சிறிய பருத்தி விதைகளை எடுத்துக் கொள்ளவும்
 2. எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
 3. மூன்று மேஜைக்கரண்டி பச்சை அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
 4. பச்சரிசியைஅரைத்து எடுத்துக் கொள்ளவும்
 5. பின் பருத்தி விதைகளை தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்
 6. அரைத்த பருத்தி விதைகளை சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும்
 7. துணியைப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்
 8. அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய பருத்தி பாலை ஊற்றவும்
 9. பாலில் அரைத்த பச்சரிசி மாவை கலக்கவும்
 10. கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும்
 11. ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்
 12. கால் தேக்கரண்டி சுக்கு பொடி சேர்க்கவும்
 13. மூன்று ஏலக்காய் அல்லது கால் தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்க்கவும்
 14. பாலை நன்கு கொதிக்க விடவும்
 15. பால் சிறிது கெட்டியாக நிறம் மாறி வரும்
 16. வெல்லத்தை தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
 17. பருத்திப் பால் கலவையில் வெல்லக் கரைசலை சேர்க்கவும்
 18. பால் நிறம் மாறி வரும் ,பின் 5 நிமிடம் கொதிக்க விடவும்
 19. தேங்காய்த்துருவல் சேர்க்கவும்
 20. மீண்டும் அரை தேக்கரண்டி சுக்கு பொடி சேர்த்து கலக்கவும்
 21. கால் தேக்கரண்டி மிளகு தூள் சேர்க்கவும்
 22. அடுப்பை அணைக்கவும்.
 23. சூடான சுவையான பருத்திப் பால் தயார்
 24. மழைக்காலங்களில் பருத்திப்பால் மிகவும் ஏதுவாக இருக்கும்
 25. மிளகு மற்றும் சுக்கு சேர்ப்பதினால் சளி , இருமல் தொல்லை இல்லை

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raihanathus Sahdhiyya
Aug-03-2018
Raihanathus Sahdhiyya   Aug-03-2018

Nice.. Thanks for sharing

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்