வீடு / சமையல் குறிப்பு / முப்பருப்பு சாம்பார்

Photo of 3 dal sambar by Surya Rajan at BetterButter
230
0
0.0(0)
0

முப்பருப்பு சாம்பார்

Aug-03-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முப்பருப்பு சாம்பார் செய்முறை பற்றி

பாசிப்பருப்பு துவரம்பருப்பு கடலைப்பருப்பு ஆகிய மூன்று பருப்புகளை கொண்டு செய்யப்படும் சுவையான புரோட்டின் நிறைந்த சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துவரம்பருப்பு ஒரு கைப்பிடி
  2. கடலை பருப்பு ஒரு கைப்பிடி
  3. பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி
  4. சாம்பார் பொடி ஒரு ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. பெருங்காயத்தூள் சிறிதளவு
  7. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  8. கடுகு அரை டீஸ்பூன்
  9. சீரகம் அரை ஸ்பூன்
  10. கருவேப்பிலை சிறிதளவு
  11. கொத்தமல்லித்தழை சிறிதளவு
  12. முருங்கக்காய் 1
  13. கேரட் ஒன்று
  14. தக்காளி 2
  15. பீன்ஸ் 5
  16. சின்ன வெங்காயம் 6
  17. பூண்டு 10 பல்
  18. மிளகாய் 2
  19. தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பருப்புகள் அனைத்தையும் நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. காய்கறிகளை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  3. சின்ன வெங்காயம் தவிர அனைத்து காய்கறிகள் மற்றும் பருப்பினை 10 நிமிடம் குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. வேக வைத்த பருப்புடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. பின் அதனுடன் சாம்பார் பொடி சேர்த்து கிளறி அடுப்பை ஆப் செய்யவும்
  7. வேகவைத்த பருப்புடன் மேற்கூறிய தாளிப்பினை சேர்த்து பெருங்காயத்தூள் கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்