வீடு / சமையல் குறிப்பு / சோயா ஸ்டஃப்ட் இட்லியும், சோயா மசால் தோசையும்

Photo of Soya stuffed idli and soya masal dosa by Jayasakthi Ekambaram at BetterButter
506
1
0.0(0)
0

சோயா ஸ்டஃப்ட் இட்லியும், சோயா மசால் தோசையும்

Aug-03-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா ஸ்டஃப்ட் இட்லியும், சோயா மசால் தோசையும் செய்முறை பற்றி

சோயா மசாலாவை உள்ளே வைத்து செய்யும் இட்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா 15
  2. தக்காளி ஒன்று
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை ஸ்பூன்
  4. வெங்காயம் ஒன்று
  5. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  6. தனியாத் தூள் அரை ஸ்பூன்
  7. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  8. உப்புத் தூள் அரை ஸ்பூன்
  9. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஒரு ஸ்பூன்
  10. எண்ணெய் 3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்
  2. தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  3. சோயாவை 15 நிமிடம் சுடுதண்ணீரில் ஊற வைக்கவும்
  4. சுடு தண்ணீரை வடிகட்டி விடவும்
  5. பிறகு குளிர்ந்த நீரை அதில் ஊற்றவும்
  6. தண்ணீரை சுத்தமாக பிழிந்து வடிகட்டவும்
  7. ஒரு அடுப்பில் வாணலியை வைத்து 3 ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்
  8. அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் அரைத்த தக்காளி விழுது மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் உப்பு தூள் அனைத்தையும் போட்டு வதக்கவும்
  9. பிழிந்தெடுத்த சோயாவை கையால் தூளாக உதிர்த்துக் கொள்ளவும்
  10. உதிர்த்த சோயாவையும் இஞ்சி பூண்டு விழுதையும் வாணலியில் போட்டு வதக்கவும்
  11. கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் சுண்டியதும் அடுப்பை ஆப் செய்யவும்
  12. இப்போது இட்லிக்கான ஸ்டஃபிங் ரெடி
  13. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்
  14. இட்லி தட்டில் எண்ணெய் தடவி கொஞ்சம் மாவை ஊற்றவும்
  15. அதன் மேல் ஸ்டஃப்பிங் வைக்கவும்
  16. பிறகு மீண்டும் அதன் மேல் மாவை ஊற்றவும்
  17. இதை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்கள் ஆவியில் வேக விடவும்
  18. 15 நிமிடத்திற்கு பிறகு இட்லியை ஆறவைத்து கட் பண்ணவும்
  19. பெரியவர்களுக்கு இந்த இட்லி சத்தான உணவாகும்
  20. இதே ஸ்டஃபிங்கை தோசையின் உள்ளே வைத்து தோசையை சுருட்டி கட் செய்து குழந்தைகளுக்கு தரலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்