வீடு / சமையல் குறிப்பு / குல்ஃபி ஐஸ்க்ரீம்

Photo of kulfi ice- cream by Apsara Fareej at BetterButter
407
1
0.0(0)
0

குல்ஃபி ஐஸ்க்ரீம்

Aug-04-2018
Apsara Fareej
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குல்ஃபி ஐஸ்க்ரீம் செய்முறை பற்றி

பாரம்பர்ய முறையில் செய்முறை இல்லாமல் இது கொஞ்சம் வித்தியாசமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. திக் க்ரீம் - 250 மிலி
  2. பால் - 125 மிலி
  3. கண்டண்ஸ்ட் மில்க் - 300 மிலி
  4. குங்கமப்பூ - 1/2 தேக்கரண்டி
  5. பாதாம், பிஸ்தா - விருப்பத்திற்கு ஏற்ப பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வழிமுறைகள்

  1. க்ரீம் செய்யும் போது மட்டுமே ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுக்க வேண்டும். பால் வெதுவெதுப்பான சூடில் இருக்கொம் போது குங்குமப்பூ போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் க்ரீமை போட்டு ஹாண்ட் விஸ்க்காலோ, எலக்ட்ரிக் விஸ்க்காலோ க்ரீம் கொஞ்சம் கெட்டியாகும் வரை நன்கு அடிக்கவும்.
  3. பிறகு அதில் கண்டன்ஸ்ட் மில்க்கை சேர்த்து நன்கு ஒன்று சேர அடித்துக் கொள்ளவும்.
  4. அதன் பின் பாலோடு சேர்ந்த குங்குமப்பூ சேர்த்து ஒன்று சேர அடித்து விடவும்.
  5. அதன் பிறகு நறுக்கிய பருப்புகளை சேர்த்து கரண்டியால் கலந்து விட்டு குட்டி குட்டி மண் சட்டியிலோ, கப்களிலோ ஊற்றி ஃப்ரீசரில் 6 மணிநேரம் வைக்கவும். இரவு முழுக்க வைத்து பகலில் எடுத்து சாப்பிடவும் சரியாக இருக்கும்.
  6. செய்வதற்கு எளிதான, சுவையான குல்ஃபி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்