Photo of Vada kari by kala sriram at BetterButter
642
0
0.0(0)
0

வடகறி

Aug-04-2018
kala sriram
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வடகறி செய்முறை பற்றி

சென்னையில் இட்லி தோசைக்கு சைட் டிஷ் வடகறி. எண்ணெயில் குளித்துவரும் வடைக்கு பயந்தே பலர் வடகறி சாப்பிடமாட்டார்கள். இந்த ஆரோக்கியமான வடகறி உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வடைக்கு: கடலை பருப்பு - 1 கப், 4 காய்ந்த மிளகாய், உப்பு தேவைக்கேற்ப
  2. கறி செய்ய: நாட்டுதக்காளியாக இருந்தால் -4 பெங்களூர் தக்காளி என்றால் 6, உப்பு,மஞ்சள் தூள், தனியா தூள் -11/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -1மஞ்சள் தூள் கொஞ்சம்
  3. தாளிக்க : 2 ஏலக்காய், 3 லவங்கம், 1 பிரிஞ்சி இலை, எண்ணெய் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடலை பருப்பு மிளகாய் இவற்றை 20 நிமிடம் ஊறவைக்கவும். அதிகம் நீர் சேர்க்காமல் அரைத்து உப்பு தேவையான அளவு போட்டு கலக்கி குக்கரில் ஸ்டீம் செய்து ஆறியதும் கைகளால் உதிர்க்கவும். ( அதிகம் உதிர்க்க வேண்டாம். வடையை பிய்த்து போட்டது போல் இருக்க வேண்டும்)
  2. தக்காளியுடன் விரும்பினால் இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்க பட்டிருக்கும் பொருட்களை சேர்க்கவும். பிறகு பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் தக்காளி கலவையை கொட்டி கொதிக்க விடவும். உப்பு, மஞ்சள் தூள், தனியா மிளகாய்த்தூளுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  3. வேக வைத்து வைத்திருக்கும் வடையை அதில் கலக்கி இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு மல்லி தழை விரும்பினால் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும். கம கமக்கும் சென்னை ஷ்பெஷல் வடகறி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்