வீடு / சமையல் குறிப்பு / குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ஆட்டு கால் சூப்

Photo of Kids healthy goat leg soup by hajirasheed haroon at BetterButter
467
3
0.0(0)
0

குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ஆட்டு கால் சூப்

Aug-04-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ஆட்டு கால் சூப் செய்முறை பற்றி

ஆட்டுக்கால் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் வெங்காயம் தக்காளி உப்பு அரிசி கழுவிய நீர் சேர்த்து செய்துள்ளது ரொம்பவே ஆரோக்கியமானது நடக்கும் குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம் கால்களுக்கு பலம் கொடுக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டுகால் ஒரு செட்
  2. வெங்காயம்-3
  3. இஞ்சி பூண்டு விழுது 5 டீஸ்பூன்
  4. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  5. தக்காளி-2
  6. உப்பு தேவையான அளவு
  7. அரிசி கழுவிய நீர் ஒரு கப்
  8. கொத்தமல்லி இலை
  9. பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
  10. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு
  11. நல்லெண்ணெய் 100 ml

வழிமுறைகள்

  1. கடையில் ஆட்டுக்காலை வாங்கி சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை ஏலக்காய் கிராம்பு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு ஆட்டுக்கால் சேர்த்து வதக்கவும்
  5. மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும்
  6. அரிசியில் தண்ணீர் ஊற்றி முதல் தண்ணீரை கீழே ஊற்றி விடவும் இரண்டாவது தண்ணீரை ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்
  7. இப்பொழுது ஆட்டுக்காலில் அரிசி கழுவிய நீரையும் ஊற்றவும்
  8. இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பை அதிக தீயில் வைத்து 5 விசில் வேகவிடவும் குறைவான தீயில் வைத்து மூன்று விசில் விடவும் ஓரளவு தண்ணீர் வற்றி ஆட்டுக்கால் வெந்து சூப் கிடைத்துவிடும்
  9. பெப்பர் தூள் கொத்தமல்லி இலை தூவி குழந்தைகளுக்கு கொடுக்கலாம் ஆரோக்கியமானது
  10. ஆட்டுக்காலில் புரோட்டின் நிறைந்துள்ளது அரிசி கழுவிய நீரில் ஊட்டச்சத்துகளும் கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்துள்ளது ஆகவே நாம் இந்த நீரை பயன்படுத்தலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்