வீடு / சமையல் குறிப்பு / கொத்துக்கறி கடலைபருப்பு

Photo of Mutton keema with bengal gram by Munsila Fathima at BetterButter
780
1
0.0(0)
0

கொத்துக்கறி கடலைபருப்பு

Aug-04-2018
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்துக்கறி கடலைபருப்பு செய்முறை பற்றி

சாதம், சாபத்திற்கு ஏற்றது. 100gm கடலை பருப்பில் சுமார் 18கும் புரத சத்தும், மட்டனில் 20gm வரை புரத சத்தும் உள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மட்டன் கீமா 300 கிராம்
  2. கடலைப் பருப்பு 100 கிராம்
  3. வெங்காயம்-3
  4. தக்காளி ஒன்று பெரியது
  5. பச்சை மிளகாய் 2
  6. இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி
  7. சிவப்பு மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  8. கறிமசாலா மூன்று தேக்கரண்டியளவு
  9. உப்பு, எண்ணெய் தேவைக்கு
  10. பட்டை கிராம்பு தூள் சிறிதளவு
  11. அல்லது பட்டை ஒரு சிறிய துண்டு , கிராம்பு இரண்டு
  12. மல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்
  2. மறுபுறம் ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை தண்ணீர் ஊற்றி 25 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயத்துடன், பச்சை மிளகாய், உப்பு சேர்த்தால் வெங்காயம் சீக்கிரம் வதங்கும்
  5. வெங்காயம் வதங்கிய பின் அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  6. அதனுடன் தக்காளி ,மிளகாய் தூள், பட்டை கிராம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
  7. பின்பு அதனுடன் மட்டனை(கீமா) சேர்க்கவும்
  8. மட்டனுடன் கறிமசாலா தூள் சேர்க்கவும்
  9. பின்பு நன்கு பிரட்டி ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து 10 லிருந்து 15 நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள்
  10. மட்டன் வெந்த பின் அதனுடன் ஊறவைத்த கடலைப்பருப்பை சேர்த்து ஒன்று அல்லது இரண்டு விசில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்
  11. வெந்தபின் மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்