Photo of Thavala Vadai by Sowmya Sundar at BetterButter
686
0
0.0(0)
0

தவல வடை

Aug-04-2018
Sowmya Sundar
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தவல வடை செய்முறை பற்றி

திருநெல்வேலி மாவட்டத்தில் செய்யக்கூடிய சுவையான பண்டிகை மற்றும் மாலை நேர ஸ்னாக் இது.பருப்பு வகைகள் மற்றும் அரிசி சேர்த்து செய்வதால் ஆரோக்கியமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு-1/2 கப்
  2. கடலை பருப்பு-1/2 கப்
  3. பச்சரிசி-1/4 கப்
  4. உளுத்தம்பருப்பு-1/4 கப்
  5. பாசிப்பருப்பு- ஒரு கைப்பிடி
  6. மிளகாய் வற்றல்-4
  7. பச்சை மிளகாய்-2
  8. பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் -1/4 கப்
  9. பெருங்காயம் பொடி-1/2 டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. கறிவேப்பிலை சிறிது
  12. எண்ணெய் டீப் ஃப்ரை செய்ய

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் பருப்பு வகைகளை களைந்து விட்டு தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பாசிப்பருப்பை மட்டும் தனியாக ஊற வைக்கவும்.
  3. சேர்த்து ஊற வைத்த அரிசி பருப்பு வகைகளை தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் உப்பு பெருங்காயம் சேர்த்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
  4. அதனுடன் ஊற வைத்த பாசிப்பருப்பு , கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துண்டுகள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் விட்டு மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்