BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சென்னா பிரியாணி

Photo of Chickpea biriyani by Rachell Revathi Samuel at BetterButter
0
1
0(0)
0

சென்னா பிரியாணி

Aug-04-2018
Rachell Revathi Samuel
495 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சென்னா பிரியாணி செய்முறை பற்றி

சுண்டக் கடலை சேர்த்து செய்யப்படும் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • మితముగా వేయించుట
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுண்டக் கடலை 1/2 கப்
  2. அரிசி 1 கப்
  3. எண்ணெய் 2 ஸ்பூன்
  4. நெய் 2 ஸ்பூன்
  5. பட்டை 1
  6. கிராம்பு 2
  7. ஏலக்காய் 2
  8. அன்னாசி பூ 1
  9. பிரியாணி இலை 1
  10. பெரிய வெங்காயம் 1
  11. சீரகம் 1 ஸ்பூன்
  12. சோம்பு 1 ஸ்பூன்
  13. கருவேப்பிலை சிறிது
  14. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  15. தக்காளி 2
  16. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  17. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  18. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  19. கரம் மசாலா 1 ஸ்பூன்
  20. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. சுண்டக் கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
  2. அரிசியை 30நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  3. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, பிரியாணி இலை, கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ, சீரகம் சோம்பு சேர்த்து கிளறவும்
  4. வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  6. பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.
  7. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா மல்லித்தூள் சேர்க்கவும்.
  8. வேக வைத்த சுண்டக் கடலையை சேர்க்கவும்.
  9. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்ததும் அரிசியை சேர்க்கவும்.
  10. தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
  11. சுவையான சென்னா பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்