வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் வெந்தய கீரை புர்ஜி

Photo of Methi paneer bhurji by Fathima Beevi at BetterButter
254
1
0.0(0)
0

பன்னீர் வெந்தய கீரை புர்ஜி

Aug-05-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் வெந்தய கீரை புர்ஜி செய்முறை பற்றி

பன்னீர் வெந்தய கீரை புர்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெந்தய கீரை - 1 கப்
  2. சீரகம்-1 / 4 டீஸ்பூன்
  3. கடுகு-1 / 4 டீஸ்பூன்
  4. தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய் -2
  6. தக்காளி-2
  7. வெங்காயம்-1
  8. உப்பு- தேவையான அளவு
  9. மஞ்சள் தூள் -1 / 4 டீஸ்பூன்
  10. கரம் மசாலா - ஒரு சிட்டிகை
  11. கறிவேப்பிலை - சிறிதளவு
  12. கொத்தமல்லி இலை - 1/4 கப்
  13. புதினா இலைகள்- 6
  14. பன்னீர் - 100 கிராம்
  15. மிளகாய் தூள் - 1 / 4 டீஸ்பூன்
  16. பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. வெந்தய கீரை இலைகளை நன்கு சுத்தம் செய்யவும்.
  2. வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சிறிதாக வெட்டிக்கொள்ளவும்
  3. பன்னீரை நன்கு துருவிக் கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் ஆகியவற்றை வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. நன்கு வெங்காயம் வதங்கியதும்  பின்னர் பச்சை மிளகாய், தக்காளி, கறி இலை, புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலைகள் சிறிது உப்பு சேர்க்கவும்.
  6. பிறகு வெந்தய கீரை இலைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. நன்கு வதங்கியதும்  மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  8. வெந்தய கீரை கலவை நன்கு வதங்கி வெந்ததும், துருவிய  பன்னீர் சேர்க்கவும்.
  9. மிதமான தீயில் சுமார் 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.
  10. சூடான சாதம் அல்லது சப்பாத்தி உடன்  பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்