வீடு / சமையல் குறிப்பு / மேத்தி சிக்கன்

Photo of Methi Chicken by Menaga Sathia at BetterButter
34
0
0.0(0)
0

மேத்தி சிக்கன்

Aug-05-2018
Menaga Sathia
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மேத்தி சிக்கன் செய்முறை பற்றி

வெந்தயகீரை சேர்த்து செய்யும் இந்த சிக்கன் மிக சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் -1/2 கிலோ
  2. ப்ரெஷ் வெந்தயகீரை -1 கப்
  3. உப்பு - தேவைக்கு
  4. எண்ணெய் -1/4 கப்
  5. வெங்காயம் -1,அரிந்தது
  6. தக்காளி -1,அரைத்தது
  7. இஞ்சிபூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்
  8. பச்சைமிளகாய் விழுது -2 டீஸ்பூன்
  9. தயிர் -2 டீஸ்பூன்
  10. வரமிளகாய்தூள் -1 டேபிள்ஸ்பூன்
  11. மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
  12. கரம்மசாலா -1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிக்கனை சுத்தம் செய்யவும்.கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி தனியாக வைக்கவும்.
  2. ஆறியதும் அதனுடன் தயிர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.பின் அதே கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெந்தயகீரை சேர்த்து மொமொறுப்பாக வறுத்து தனியாக வைக்கவும்.
  3. பின் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி இஞ்சிபூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது சேர்த்து வதக்கி,தக்காளி சாறு சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி சாறு சுண்டி வரும் போது அரைத்த வெங்காய விழுது, உப்பு,மஞ்சள்தூள், வரமிளகாய்தூள் சேர்த்து கிளறவும்.
  5. பின் சிக்கன் சேர்த்து மேலும் வதக்கி தேவைக்கு நீர் சேர்த்து வேகவைக்கவும்.
  6. சிக்கன் வெந்து வரும் போது வறுத்த வெந்தயகீரை சேர்த்து மேலும் சுருள கிளறி இறக்கவும்.
  7. சாதம்,சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்