வீடு / சமையல் குறிப்பு / பனீர் & கருப்பு பீன்ஸ் என்சிலாடஸ்

Photo of Paneer & Black bean Enchiladas by Menaga Sathia at BetterButter
297
0
0.0(0)
0

பனீர் & கருப்பு பீன்ஸ் என்சிலாடஸ்

Aug-05-2018
Menaga Sathia
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பனீர் & கருப்பு பீன்ஸ் என்சிலாடஸ் செய்முறை பற்றி

இது ஒரு மெக்சிகன் உணவு.இதே போல் சிக்கனிலும் செய்யலாம்.பனீர் ஸ்டப்பிங்கை இந்தியன் ஸ்டைலில் செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மெக்ஸிகன்
  • பேக்கிங்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. டொர்டிலாஸ் - 4
  2. கறுப்பு பீன்ஸ் -1 டின்,400 கிராம்
  3. மெசரெல்லா சீஸ்- 1 1/2 கப்
  4. தக்காளி சாஸ் செய்ய:
  5. தக்காளி சாறு -200 கிராம்
  6. வெங்காயம் -1,பொடியாக அரிந்தது
  7. பூண்டுப்பல் -2,பொடியாக அரிந்தது
  8. ஆரிகனோ -1 டீஸ்பூன்
  9. பேஸில் -1 டீஸ்பூன்
  10. உப்பு -தேவைக்கு
  11. ஆலிவ் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
  12. பனீர் ஸ்டப்பிங் செய்ய:
  13. பனீர் -200 கிராம்
  14. குடமிளகாய் -1/2 கப்
  15. இஞ்சிபூண்டு விழுது-1 டீஸ்பூன்
  16. வெங்காயம் -1 பொடியாக நறுக்கவும்
  17. உப்பு - தேவைக்கு
  18. கரம்மசாலா -1/4 டீஸ்பூன்
  19. வரமிளகாய்தூள் -1 டீஸ்பூன்
  20. சீரகதூள் -1/2 டீஸ்பூன்
  21. மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
  22. எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பனீர் ஸ்டப்பிங் செய்ய: கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி குடமிளகாய், பனீர் மற்றும் அனைத்து மசாலா,உப்பு சேர்த்து கிளறவும்
  2. நன்கு உதிரியாக வரும் போது இறக்கவும்.
  3. தக்காளி சாஸ் செய்ய: கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. பின் தக்காளி சாறு,உப்பு, சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். கடைசியாக பேஸில்,ஆரிகனோ சேர்த்து இறக்கவும்.
  5. டொர்டில்லாவினை தவாவில் லேசாக சூடு செய்யவும்.
  6. அவனை 180° டிகிரி செல்சியஸ் சூடு செய்யவும்.பேக்கிங் டிரேயில் சிறிது தக்காளி சாஸ் தடவவும்.
  7. இப்பொழுது டொர்டில்லாவில் சிறிது சாஸ் தடவவும்
  8. அதன் மேல் சிறிது கறுப்பு பீன்ஸ்,பனீர் ஸ்டப்பிங், கொஞ்சம் சீஸ் வைக்கவும்
  9. அப்படியே இதனை ஸ்பிரிங் ரோல் செய்வது போல் சுருட்டி பேக்கிங் டிரேயில் வைக்கவும்.இப்படியே அனைத்து டொர்டிலாவையும் செய்து முடிக்கவும்.
  10. அதன்மேல் மீதமுள்ள தக்காளி சாஸ் ஊற்றி ,சீஸ் தூவி விடவும்.
  11. முற்சூடு செய்த அவனில் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்