BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சிலோன் வாழைக்காய் கலியா

Photo of Ripe banana dish by Hasina Hussain at BetterButter
0
1
0(0)
0

சிலோன் வாழைக்காய் கலியா

Aug-05-2018
Hasina Hussain
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிலோன் வாழைக்காய் கலியா செய்முறை பற்றி

சிலோன் ஸ்பெஷல் வாழைக்காய் கலியா

செய்முறை டாக்ஸ்

  • శ్రీ లంకన్
  • తేలికైనవి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வாழைக்காய் 2
  2. இரால் 5
  3. பல்லாரி 1
  4. சின்ன வெங்காயம் 4
  5. தக்காளி ஒன்று
  6. தேங்காய்ப் பால் ஒரு கப்
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை ஸ்பூன்
  8. பட்டை ஒரு துண்டு
  9. மிளகாய் தூள் கால் ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  11. மல்லித் தூள் கால் ஸ்பூன்
  12. சீரகத் தூள் ஒரு ஸ்பூன்
  13. கருவேப்பிலை சிறிதளவு
  14. கடுகு தாளிக்க
  15. உப்பு தேவையான அளவு
  16. சமையல் எண்ணெய் இரண்டு மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை போடவும்
  2. பட்டை வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  3. இஞ்சி-பூண்டு பச்சை வாசனை போனவுடன் வாழைக்காய் சேர்த்து வதக்கவும்
  4. இப்பொழுது எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலில் முதல் பாலை தனியாக வைத்துவிட்டு இரண்டாவது பாலில் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் மற்றும் தக்காளியை சேர்க்கவும்
  5. இறால் மற்றும் மசாலா சேர்த்த தேங்காய் பாலை ஊற்றவும்
  6. தேவையான உப்பு சேர்த்து மூடி போட்டு 15 நிமிடம் வேக விடவும்
  7. வாழைக்காய் வெந்தவுடன் எடுத்து வைத்துள்ள முதல் பாலை சேர்க்கவும்
  8. 2 நிமிடங்கள் கழித்து இறக்கி வாணலியில் எண்ணெய் கடுகு வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  9. சுவையான சிலோன் கலியா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்